பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 115. இன்ருே ரிடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் - எம்மானே கன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே (33-7). என்று விளக்குகின்ருர். இந்த உண்மையை உணராது உயிர் கள் திகைக்கும் போலும். அந்தத் திகைப்பை நீக்க வேண்டிய பொறுப்பும் அவ்விறைவனுக்கே உண்டல்லவா? அந்தக் கரணங்கள் அனைத்தும் அவன் வழியாய பின் திகைப்புக் கிட மில்லைதான்-எனினும் திகைப்பு உண்டானல் அதைத் தீர்க்க வேண்டுவது அவன் பொறுப்பே என்ற நிலையை, கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம்ரீ தேறும் வகை திகைப்புநீ தீமை நன்மை ழுழுதும்நீ வேருேர் பரிசிங் கொன்றில்ல மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகையென் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ (33-5). என்று காட்டுகிருர். அவரே வேருேர் பரிசிங்கு ஒன்றில்லை’ என அறுதியிட்டபிறகு நாம் கூறவேண்டியது ஒன்றுமில்லை. தம்மை மறந்த அடியவர் இவ்வாறு அனைத்தையும் அவனுக்கு. உரிமையாக்கி, தமக்கென ஒன்றும் இல்லாதவராய் எல்லாம். அவன் செயல் என்றே இருப்பார். இவ்வாறு இருந்த மணி வாசகர் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒர் எடுத்துக் காட்டாக, அமைகின்றது. உயிரும் இறைவனும் என்றுமுள என்பதையும் அவற்றுள் இறைவன் மாறுபாடற்றவன் என்பதையும் உயிர் உண்மை உணரின் தன்னை மறந்து தலைவனைக் கூடுமென்பதையும் அத் தகைய நல்லுயிரே மணிவாசகர் நல் உயிர் என்பதையும். அவர் வாழ்க்கையில் பலமாறுபாடுகள் உள்ளன என்பதையும், அவர் தாழ்ந்த நிலையிலுள்ள தம்மை யாருக்கும் எட்டாத இறைவன் எவ்வாறு ஆண்டு கொண்டான் என்பதையும் காட்டியதைக் கண்டோம். மேலும் அவர்தம் பாடல்