பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் -* என்பது. இதன் வழி உயிர் தான் கொண்ட மெய்யினை விட்டு நீங்கினல் மெய் இயல்பான தன் உருவை அடையும் என் கிருர் தொல்காப்பியர். இவ்வுலகில் உயிரொடு கூடிய உடம்பின் நிலையும் அத்தகையதே. பஞ்சபூதச் சேர்க்கை யால் ஆகிய இவ்வுடம்பு உயிரொடு கூடியவழி எல்லா ஏற்றங் களையும் பெற்று அசைவுற்று ஆடிப் பாடித் திரியும். ஆனல் உயிர் நீங்கிவிட்டால் அதன்நிலை என்ன? ஒருசில மணி நேரத்துக்குமேல் அவ்வுடம்பை வைத்திருக்க இயலாது. அது தன் இயல்பான உருவாகிய பஞ்ச பூதங்களாக மாறத் தொடங்கிவிடும். இதை ஆங்கிலத்தில் Decompose எனக் கூறுவர். எனவே உயிர் உடலொடு பொருந்தித் தோன்றும் தோற்றத்தை மட்டுமன்றி அது பிரியும் நிலையினையும் பிரிந்த பின் மெய் பெறும் நிலையினையும்கூட வாழ்வியல் அடிப்படை யில் தம் இலக்கண மரபு கெடாவகையில் தொல்காப்பியர் விளக்கிச் செல்லுகின்ருர், இனி, தொல்காப்பியர் காட்டும் வேறு இலக்கண அமைதிகளை வாழ்வொடு பொருத்திக் காண்போம். எழுத்துக் களில் இனப் பிரிவு உண்டு என அறிவோம். என்ன? எழுத் திலும் இனப் பிரிவா என்ற வின எழும். ஆம்! ஆனால் அந்த இனப் பிரிவு, மனித இனப் பிரிவுபோல ஒன்ருேடொன்று போட்டியிட்டு மடிவதற்காக ஏற்பட்டதன்று. மொழியாகிய கூட்டுச் சமுதாயத்தை நன்கு செயல்படுத்தும் வகையில் வாழ வைப்பதற்கெனவே அவ்வெழுத்துக்கள் இனப் பிரிவை அமைத்துக் கொண்டன. வல்லினமும் மெல்லினமும் இடை யினமும் இயைந்து தம்முள் ஒலியாலன்றி வேருகிய வேறு பாடுகள் கொள்ளாது மொழிவளரப் பயன்படுகின்றன.ஆனல் மனிதன் தன் இனத்தையே அடிப்படையாகக் கொண்டு பிற இனங்களோடு மாறுபட்டு நிலை கெடுகிருன். இந்த இனப் பிரிவிலேயும் இலக்கண மரபில் ஒவ்வொரு வல்லினத் தோடு ஒவ்வொரு மெல்லினத்தை இணைப்பர். கங்' சஞ’ ‘டண’, ‘தந’, ‘பம', 'றன’ என அவைகள் இணைந்தே வாழும். இனத்தால் தம்மைப் பிரித்துக்கொண்டு வேறுபாடுகளைக்