பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் கற்பிக்கும் வழக்கம் இவ்வெழுத்துக்களுக்கு இல்லை. இப்படிச் சில ஒலிகளின் இணைப்பும் அமைந்துள்ளன. வல்லின ஒலி தான் சாரும் மெல்லினத்துக்கு ஏற்ப வணங்கிக்கொடுக்க வேண்டிய நிலையினை மொழியியலில் காண்கின்ருேம், கால்டுவெல் இந்த g]lq.l`ILJ@L 2-6†I @LD6Øu], “Convertability of Surds into Sonants' என்ற தலைப்பில் விளக்குவர். மனிதரில் வலிமையும் வன் மையும் பெற்றவர், தம்மினும் மெலியவருடன் சேர்வதும் கலப்பதும் தம் பெருமைக்குக் குறைவு என எண்ணும் மனப் பான்மையில் வாழ்வதைக் காண்கின்ற நமக்கு இம்மொழி அமைப்பு வழிகாட்டியாக அமைகின்றது. தொல்காப்பியர் இவற்றின் விளக்கங்களையெல்லாம் எழுத்ததிகாரத்தே நன்கு விளக்கி, அவை வாழ்வொடு பொருந்திய வகைகளையெல்லாம் புலப்படுத்துகின்ருர். விரிவஞ்சி மேலே செல்லுகிறேன். இனி, சொல்லதிகாரத்திலும் தொல்காப்பியர் இலக்கண நியதிவழி நின்று வாழ்வியலைக் காட்டுகின்ருர். இப்பகுதியில் மக்களை உயர்திணையாகக் கூறி, உடல் உறுப்புகளால் மக் களைப் போன்றிருந்தும் நல்லதன் நலனும் தீயதன் தீமையும் உணராதிருக்கும் புல்லரை விலங்கொடு சேர்த்து அஃறிணை யாக்கியும் காட்டும்நிலை வாழ்வில் வேண்டப்படுவதாகும். உயர்திணைக்கு மாருகத் தாழ்திணை என்னது, அஃறிணை’ என்ற சொல்லால் குறிப்பது மொழியின் பண்பாட்டை விளக்குவதாகும். இனி, இன்றைய மனிதன் தன் செயற்கை வண்ணத் திறனுல் இயற்கைப் பொருளையும் தோற்கடிக்கும் நிலையில் பல பொருள்களைச் செய்கின்றன். அவற்ருல் எது இயற்கை, எது செயற்கை என எண்ணவும் கூடுவதில்லை. ஆயினும் தொல்காப்பியர் அவற்றைச் சொல்லும் நெறியி லிருந்தே அவை இயற்கையா செயற்கையா என அறிந்து கொள்ளக்கூடிய வகையினைக் காட்டுகின்ருர். இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் (கிளவி, 19) செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல் (கிளவி, 20) என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். இவற்றிற்கு உரை எழுதவந்த சேவைரையர் இந்த வாழ்வியல் அடிப்படைத்