பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் 15 தேவையை நன்கு விளக்குகிரு.ர். அவரது தர்க்கநெறி உல கறிந்த ஒன்று. ஈண்டு நாம் அவற்றை விட்டு மேலே செல்லலாம். { இவ்வாறே சில சொற்களின் அமைப்புக்களையும் முடிபு களையும் சேர்க்கைகளையும் தொல்காப்பியர் கூறும்போது அவற்ருல் வாழ்வியல் நன்கு விளக்கமுறுவதை நம்மால் அறிய முடிகிறது. 'கள்' என்ற விகுதி இன்று எல்லாவற் றிற்கும் பயன்படுத்தப் பெறுகின்றது. ஆனல் தொல்காப் பியர் 'கள்' அஃறிணைக்குமட்டும் உரிய ஒன்று என்றும் உயர் திணைக்குத் தேவை இல்லை என்றும் வரையறுக்கும் நிலை யினைக் காண்கின்ருேம். விகுதியாகிய கள் அன்றி, மயக்கும் "கள்ளும் உயர்திணைக்குத் தேவையற்றதென்றுதானே அறி ஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறே பெயர், வினை, இடை, உரிச்சொற்கள் மொழிவழி மக்கள் வாழ்வியலுக்கு உணர்த்திக் காட்டும் பண்பாடும் நெறிகளும் பலவாம். இவை பற்றியெல்லாம் நான் முன்னமே வெருெரு நூலில் (சமுதாய மும் பண்பாடும்) விளக்கி யிருக்கின்றேளுதலின் இங்கு அவற்றை விடுத்து, பொருள் வழியில் தம் பொருளதி காரத்தே வாழ்வியலை எவ்வாறு காட்டுகிருர் என்பதை மட்டும் தொட்டுக் காட்டலாம் எனக் கருதுகிறேன். பொருளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தார்கள். அகம் என்பது உள்ளத்துள்ளே பெறும் இன்பம் என்பர். அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வியலின் சிறப்புக் களாகிய நான்கில் இன்பமே அகமாகத் திகழ்வது என்றும் மற்றவை மூன்றும் புறமென்றும் அறிந்தோர் அறுதியிடுவர். அவ்வக ஒழுக்கத்தே தலைவன் தலைவி என்ற இருவரே முக்கிய மானவர். அவரைச் சேர்த்து வைக்கவும் சேர்ந்து வாழவும் பல துணையாளர் இடம் பெறுகின்றனர். அத்தலைவன் தலைவி யரது காதல் ஒழுக்கமே உலக வாழ்வின் அடிப்படையாக அமைகின்றது. முதலில் தலைவன் தலைவியைக் களவியலில் கண்டு மகிழ்கின்ருன். களவு நன்ருகுமிடமே அகம். ஒருத் தியை ஒருவன் களவில் புணரும் காலத்து எவ் வெவ் வகையில்