பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 135 எங்கும்போய்க் கரைகாணு தெறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே (5-5) என்பன அவர் பாடல்கள். இப்படியே இன்னும் பல உவமை களைக் காட்டுகிரு.ர். விரிவஞ்சி மேலே செல்கிறேன். அடுத்த பதிகத்தில் ஆழ்வார் அகப்பொருள் துறையைக் காட்டுகிரு.ர். கன்னியர் ஊடிக் கண்ணனை எள்குதல்’ என்ற தலைப்பில் ஆயர்குலப்பெண்கள் புலர்ந்தும் மலர்ந்தும் ஊடியும் சாடியும் அவனைப் பழிக்கும் முகத்தால் அகச்சுவையை ஆழ் வார் அழகுபடக் காட்டுகின்றர். இறைவைேடு இரண் டறக் கலக்கும் பேரின்ப நெறிக்கு ஏற்ற சிற்றின்பச் சுகப் பொருள் துறையைப் பாடாத மெய்யடியார் இல்லை. இப் பத்தில் ஆழ்வார் கண்ணன் க்ோபியர்களுடன் எவ்வெவ்வாறு கலந்தும் குழைந்தும் மறைந்தும் வெளிப்பட்டும் காட்டியும் மறைந்தும் விளையாடினன் என விளக்குகிருர். இவற்றை ஆழ்ந்து நோக்கின் ( இறைவன் உயிர்கள் பொருட்டுக் செய்யும் அருள்விளையாடல்களே இவை என்பது நன்கு விளங்கும். இறைவன் உயிர்களுக்கு இடையில் விளையாடும் ஆடலை எண்ணித்தானே என்னவோ அடியார் இப்பத்தின் மூன்ருவது பாடலைப் பாடுகிருர். பல தோழிப் பெண்களுக் கிடையில் அவன் ஒருவன் ஆடும் ஆடலே நாமும் கண்டு மகிழ வேண்டாமா? இதோ அவர் வாக்கு. கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து, ஆங்கே ஒருத்தி தன்பால் மருவிமனம் வைத்து, மற்ருெ ருத்திக்கு உரைத்து, ஒருபேதைக் குப்பொய் குறித்து, புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்தி, அவளுக்கும் மெய்யன் அல்லை மருதிறுத் தாய் உன் வளர்த்தி யூடே வளர்கின்றதால் உன்றன் மாயை தானே (6.3)