பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் அடுத்து வருகின்ற பத்துப் பாடல்களும் தேவகி புலம்ப லாக அமைகின்றன. தேவகி மைந்தளுகப் பிறந்தும் அவள் அவனை வளர்க்கும் பேறு பெறவில்லை; வாசுதேவன் கையில் தவழும் வாய்ப்பினை அவருக்குக் கண்ணன் நல்கவில்லை. நந்தகோபன் வீட்டில் யசோதை இளஞ்சிங்கமாக வள்ர்ந் தான் மாயன். இந்த நிலையை எண்ணி, வாய்ப்பளித்தும் நழுவ விட்டுப் பிள்ளை இன்பத்தை இழந்த அந்தத் தாய் உள்ளம் எவ்வளவு வாடியிருக்கும்? இந்த நிலையை எண்ணிப் பார்த்தார் யார்? ஒருவருமில்லை, குலசேகரர் எண்ணினர்உள்ளம் குமுறினர். உண்மையான தேவகிகூட அவ்வாறு புலம்பி இருக்கமாட்டாள் எனக் கூறலாம். ஆனல் ஆழ்வார் தம்மை மறந்த நிலையில் தம்மையே தேவகி ஆக்கிக்கொண்டு புலம்பும் புலம்பல் நம்மையும் நீர் விட்டு வாய்விட்டுப் புலம்ப வைக்கிறது. கண்ணனை எவ்வெவ்வாறு த்ாலாட்டி இருக்கவேண்டும் என்று தாய் உள்ளம் எண்ணுகிறது. அதே வேளையில் அந்த இன்பத்தை இழந்த நிலையை எண்ணி வாடுகிறது. இள மையில் குழந்தைக்குச் செய்யும் பணிவிடைகளையும் அதைச் சீராட்டிப் பாலூட்டி அள்ளிஅணைத்து அகமகிழும் நிலையையும் எல்லாம் எண்ணிப் பார்க்கிறது. அப்பிள்ளைமை இன்பத்தை எண்ணி உருகி நிற்கிறது அத்தாயுள்ளம். தவழ்ந்தும் தளர்நடை நடந்தும் இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் உண்ணும் நிலையினையும் காணமுடியவில்லையே என நினைக்கிறது அவ்வுள்ளம், தாயின் தனத்தில் வாய் வைத்து உண்ணும் நிலையினையும் பிற விளையாடல்களையும் எண்ணுகின்றது. கண்ணன் பின் வளர்ந்து செய்யும் விளையாடல்களையும் கண்களில் ஒளிவிடக் கண்டு நேரில் காணவில்லையே எனக் கவல்கிறது தேவகி உள்ளம்-தேவகி உள்ளமா கவல்கிறது? அது கவலை பெற்றதோ இல்லையோ நாமறியோம். ஆனல் தம்மை மறந்த குலசேகரர்-தாயாய் மாறிய குலசேகரர் உள்ளம் கவல்கிறது. வாய்பாடுகிறது.