பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் கண்ணன் விளையாட்டைக் காட்டிய ஆழ்வார் இராமனை மறப்பாரோ! மனித குலத்துக்கே விளக்கமென வந்த இராமன் புகழைத் தாலாட்டின் மூலமும் தசரதன் புலம்பல் வழியும் உலகுக்கு உணர்த்துகின்ருர்-தாலாட்டில் பாட்டின் பின் பாட்டாக அப்பத்துப் பாட்டிலும் இராம காதை அனைத் தையும் உள்ளடக்குவதோடு ஒவ்வொன்றிலும் இராமனின் அருள்நல இனிமையைக் காட்டுகின்ருர். குழந்தையைத் தாலாட்டுவது சிறந்த இன்பம் தருவது. அந்த இன்ப நிலையில் தம்மை மறந்து வெறி கொண்டவராக விளங்குகின்ருர் ஆழ்வார். கண்ணன் தாலாட்டினை இழந்த தேவகியின் புலம் ப%வப் பாடிய அதே நிலையில் இராமனைத் தம் வாயாரத் தாலாட்டுகின்ருர். இத்தாலாட்டில் இராம காதையே அடங்கி விடுகிறது. இராமாயணத்தைச் சுருக்கமாக அறிந்துகொள்ள விரும்புகின்றவர்கள் இப்பாடல்களைப் படித்தால் போதும். இராம சரிதத்தில் முக்கிய நிகழ்ச்சிகளே விடாமலும் சுவை படவும் ஆழ்வார் காட்டும் திறன் அறிந்து இன்புறத்தக்க தாகும். இப்பதிகத்தை ஆழ்வார் கணபுரத்தில் உள்ள இறைவன்மேல் பாடியதாகவே அமைக்கின்ருர் கோசலையின் மணிவயிறு வாய்த்து, அயோத்தியில் பிறந்து, தாடகை உரம் உருவி, சனகன் மருகனகி, தாசரதியாகி, மைதிலியின் மன வாளருகி, செல்வம் பரத நம்பிக்கே அளித்து, இளையவனேடு அருங்கானம் அடைந்து, வாலியைக் கொன்று இளைய வான ரத்துக்கு அரசளித்து, மலேயதல்ை அணைகட்டி அலைகடலைக் கடந்து, சிலையதல்ை இலங்கையை அழித்து இளையவருக்கு அருள் செய்து, அயோத்தி நகர் திரும்பிய அரங்கத்தும் கண புரத்தும் வாழும் கருமணியே எனக் கூறித் தாலேலோ’ சொல்லும்போது அவ்விறையருளில் நாமும் உறங்கத்தானே வேண்டும்? - கொங்குமலி கருங்குழலாள் கோசலதன் குலமதலாய்! தங்குவரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதி! கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தெம் கருமணியே! எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே! தாலேலோ(8 - 3)