பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பாரதி-என்றும் வாழும் கவி பாரதி என்ற சொல்லுக்கே கலைமகள் என்று பொருள்: கல்விக்கு முதலிடமாய்க் கலைகளுக்கெல்லாம் பிறப்பிடமாய்ச் சொல்லும் பொளுக்கெல்லாம் முதலிடமாய் அமைந்த அந்தத் தெய்வத்தைத்தான் நாம் பாரதி என்கின்ருேம். அந்தத் தெய்வமாம் பாரதி என்றும் மங்காது சீரிளமைத் திறங் குன்ருத வகையில் சிறக்க வாழும் தெய்வமாகும். உலகமும் இதில் வாழும் உயிர்களும் அவற்றின் வாழ்க்கையும் செயல் களும் பிற அனைத்தும் அத் தெய்வத்தின் ஆணைவழியே இயங்குகின்றன. இத்தகைய முதற் பொருளாகிய தெய் வத்தின் பெயர் கொண்ட யார்தான் சிறக்க வாழாதிருக்க முடியும்? எனவே நம் பாரதியின் பெயர்-சங்கம்-பிற. அனைத்தும் காலத்தை வென்று வாழ்வனவே! - இக் கல்கத்தாப் பெருநகரில் பாரதி தமிழ்ச் சங்கம் தோன்றி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுற்றன. திரும்பிப் பார்க்கும் போது இந்தக் கால் நூற்ருண்டில் இச்சங்கம் செய்த பெருந் தொண்டுகள் நம் கண்முன் காட்சி அளிக்கின்றன. இளமையில் சிறு சிறு ஊறுகளுக்குத் தப்பி, தொண்டேவாழ்வு என்ற அடிப்படையில் தம்மை மறந்து பணியாற்றும் யாரும்எதற்கும் அஞ்சாது கடமை வீரராய் நின்று செம்மைப் பணிபுரியும் யாரும்-நூற்ருண்டு நூற்ருண்டுக் காலங்களில்