பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் பள்ளத்தில் வீழ்ந்திருந்த குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் என்பது அவர் வாக்கு. ஆம்? தம்மை மறந்து ஊற்றுப் பெருக்கெனக் கவிபாடும் புலவர்தம் கவிதைகள் நாட்டு மக்களை விழிப்புற்று வீறுபெறச் செய்து இன்பவாழ்வை அளிப்பன அல்லவோ! இப்பாரதி பாடிய பாடல்களைத் தெரு எல்லாம் முழங்கிய காரணத்தாலன்ருே பாரத நாட்டு மக்கள் உரிமை உணர்வு பெற்று, வீறு பெற்றெ. ழுந்து, விடுத்லை பெற்றுச் செம்மாக்கின்றனர்? இவ்வாறு இவர் பாடிய கவிதை இலக்கணத்துக்கு இவரே சான்ரு கின்ருர். பாரதியும் கவிஞர் எப்படி அமைய வேண்டுமோஎத்தகைய கவிதைகள் பாட வேண்டுமோ அப்படியே அமைந்து அப்படியே பாடித் தம்மை மறந்து நின்ற கார ண த் தாலேயே தரணி உள்ளளவும் வாழும் செம்மை வாழ்வு பெற்ருர். அவ்வாறு அக்கவிஞரைச் சாகாது வாழ: வைத்த கவிதைகளை ஒன்றன்பின் ஒன்ருகக் காணுமுன் அக் கவிதைகள் காட்டும் அறநெறி வழியே அப்புலவர் வாழ்ந்து காட்டினர் என்ற உண்மையையும் இங்கே கூறக் கடமைப் பட்டிருக்கிருேம் நாம். சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய வாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்ற குறளுக்கு ஏற்பச் சொல்லொன்று செயலொன்முக உள்ளவர்களைக் காணும் நமக்கு, சொல்லியவாறே வாழ்ந்து காட்டிய பாரதி ஒரு பெருவிளக்காக அமைகின்ருர் என்பது பொருந்தும். ஆம்! பாரதி பாடல் வழிமட்டுமன்றி அப்பாடல்களில் விளக்க மாகிய வாழ்க்கை நெறியிலும் தமக்கென வாழாது தம்மை மறந்து எளிய-ஆல்ை இனிய-தெய்வ வாழ்வில் சிறக்க வாழ்ந்தார் என்பதைத் தெளியின் அவர் தூய உள்ளத்துக்கும் அதன்வழி எழுந்த தெய்வப்பாடல்களுக்கும் தேவையான அடிப்படை உண்மை நமக்குத் தெற்றென விளங்குமல்லவா?