பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி-என்றும் வாழும் கவி 14? பாரதி பாடிய பாடல்கள் பல இவரை அமரராக்கின. அவற்றைக் காண்போம். பாரதி தேசியப் பாடல்களைப் பாடி மக்களை வீறுப்பெறச் செய்தார் எனக் கண்டோம். அவைகள் தரத்தில் உயர்ந்த வைதாம். அறியா மக்களையெல்லாம் தட்டி எழுப்பி, தெருத் தோறும் அவைகள் உணர்வைத் தந்தன. அந்நிய ஆங்கில ஏகாதிபத்தியத்தை நாட்டில் கால் ஊன்ருவகையில் அதை. அடித்து விரட்டிய பெருமைக்குரியன அப்பாடல்கள். வ. உ. சிதம்பரம்பிள்ளை வெள்ளையனே எதிர்த்து வீறு பேசிய தாகப் பாரதி பாடிய பாடல்களை என் இளமைக் காலத்தில் நானே குதித்துக் குதித்துப் பாடியிருக்கிறேன். அத்தகைய' பாடல்கள் கேட்போரை வெறி கொள்ளச் செய்தன. உரி' மைக்குப் போராட உணர்வூட்டின. நாட்டு ஒருமை உணர்வே அந்நலனை இம்மண்ணில் நில்லாது அகற்றிற்று. என்று தணி யும் இந்த சுதந்திர தாகம், வீர சுதந்திரம் வேண்டி நின்ருர், ‘விடுதலை-விடுதலை-விடுதலை முதலிய முழக்கப் பாடல் களும் இவை போன்ற பிறபாடல்களும் 1947-க்கு முன் இந்த நாட்டில் உயிர்நாடிகளாக விளங்கின. எனினும் உரிமை பெற்றபின் அவற்றைப் பாடுவர் சிலர். அவை விடுதலை தேடித்தந்த பாடல்கள் என்று வரலாற்று. எல்லையில் வைத்து எண்ணப்பெறும் சிறப்பினைப் பெறும் என்ருலும், அவை எல்லோராலும் எக்காலத்தும் பாடப் பெற்றுக் காலத்தை வென்று வாழ்ந்து, அவற்றைப் பாடிய பாரதியையும் சாகா வரம் பெறச் செய்யுமா என்பது இப். போதே நமக்கு விளங்கவில்லை. இன்று அவற்றை அந்த உணர்வோடும் உள்ளத்துப் பிடிப்போடும் பாடுவர் இலரேபாடத்தேவையும் இல்லையே. ஆனல் அதே வேளையில் பாரதியை நித்தியத்துவ நெறிக்கு ஈர்த்து அவரை வாழ வைக்கும் பாடல்களும் பலவன்ருே? காலமும் நாடும் பிறவும் வேறுபாடு காணு வகையில் அவை வாழ்கின்ற காரணத். தாலேயே அவற்றை ஒட்டிப் பாரதியும் காலத்தை வென்ற