பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வெள்ளிவிழாச்,சொற்பொழிவுகள் கவியாக விளங்குகின்ருர் என்பது தேற்றம். அவற்றுள் ஒரு சிலவற்றை இங்கே காண்போம். கவிதையைப் பாரதியே பாராட்டுகின்ருர். அதைத் தலைவியாக்கி மகிழ்கிருர். மனைவியாம் கவிதைத் தலைவி என வாயார வாழ்த்துகிருர் பாரதி. வாழ்வோடு பொருந்திய உற்ற செல்லம்மாளைக் காட்டிலும் இத்தலைவியைச் செல்வ முற்றவளாகக் காட்ட நினைக்கிருர் கவிஞர். உண்மையும் இது தானே. இக்கவிதை மனைத் தலைவிதானே பாரதிக்குச் சாகா வரம் தந்து வாழ வைக்கின்ருள். அக்கவிதைத் தலைவியை, மனைக்கண் வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும் ஒர்நாட் போலமற் ருேர்நாள் தோன்ருது பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ நடத்திடும் சக்தி கிலேயமே என்று அவர் பாராட்டுகின்ருர். அறிதோறறியாமை கண்டற் முல்கவிதைத்தலைவி வீட்டில்ஒருநாளுக்கு மற்ருெருநாள்புதுப் புது அறிவுசால் செல்வங்களைப் படைத்துச் சிறக்கிருளன்ருே? வாழ்வில் அனுபவத்தில் பெறும் அனைத்தையும்-நல்லதையும் அல்லதையும்-உயர்வையும் தாழ்வையும்-ஒன்றிய வகையில் பிணைத்து அவ்வப்பொருளையும் அததன் திறனுக்கேற்ப அழகுறச் சொல்லும் பொருளும் செறிய, அதனுல் வாழ்வின் வளம் மலரச் செய்யும் சக்தி கவிதைக்கு உண்டல்லவா? அக்கவிதைப் பெண்ணின் காதலர் பாரதி காலத்தை வென்று வாழ்வதில் வியப்பில்லையன்ருே! அக்கவிதைப் பெண்ணின் அடிமையாக இருந்து, தாம் பெற்ற நலமெலாம் நாமும் பெற இச்சாகாக் கவிஞர் நினைவு -கூர்ந்து நோக்குகின்ருர். அந்நோக்கின் உள்ளொளியில் மற் ருெரு கவிதை உருவாகின்றது. கவிதைக் காதலி' எனவே