பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி-என்றும் வாழும் கவி 153 என்றும் இறைவன் தன்மையை நமக்கு எடுத்துரைக்கின்ருர். இந்தத் தெளிந்த நல்லுணர்வில் பகை ஏது ? உறவேது? எனவே அவர்வாய், பகைவனுக் கருள்வாய்-கன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் - புகைநடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே பகைநடுவினில் அன்புருவானகம் பரமன் வாழ்கின்ருன் தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு சிங்தையிற் போற்றிடுவாய்-கன்னெஞ்சே அன்னை பராசக்தி அவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய் என்று பாடுகிறது. இத்தகைய நல்ல உள்ளம் மக்களுக்கு என்று வருமோ? கொல்லவரும் புலியைப் பாரதியார் காட் டியது போன்று நினைந்து மகிழ்ந்தால் அப்புலியும் ஊறு செய்யுமோ? செய்யாது. இதைத்தான்போலும் தாயு மானவர் நெடிய பெருவேங்கையைக் கட்டியே தழுவலாம், நீளரவினைப் பூணலாம்’ எனக் காட்டிச்சென்ருர். இந்த வகை யில் பகைவனுக்கு அருளும் நல் நெஞ்சம் உடைய சான்ருேர் என்றென்றும் வாழ்பவர் தாமே. ஆம்! பாரதியாகிய சான் ருண்மை சீலர் என்றென்றும் வாழும் மேலானவராஞர். ‘இன்ன தம்ம இவ்வுலகம், இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நம் முப்பாட்டன், தமிழ்ப்புலவன் பாடி வைத்துச் சென் மூன். உலகம் துன்பம் மிகுந்தது என்று எண்ணிச் சளைப்பதைக் காட் டிலும் அதை விட்டு ஒடித்துறவு பூண்பதைக் காட்டிலும் அத ைேடு பொருந்தி அத்துன் பத்தில் இன்பங் காண்பதே மனிதப் பண்பு. ஆம், பாரதியார் துறவை வெறுப்பவர்தாம். மாயை யைப் பழிக்கும் அவர், அதைவிட்டு அஞ்சி ஓட வேண்டா வெ-10