பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் மென்றும் அதை அடக்கி ஆள வேண்டுமென்றும் கூறுவர். தங்கச் சிலைபோல் நிற்கிருள் என் மனைவி. அவள் பொய்யா?” என்றுகேட்பார். எனவே உலகவாழ்வில் உழன்ருல் அனைத்தை யும் இன்பமாகக் காணமுடியும். அப்பர் பெருமானைக் காட் டிலும் அதிகமாக அல்லல் உற்றவரை வரலாற்றில் காண முடியாது. ஆண்டவன் அடியைச் சிக்கெனப் பிடித்த க்ார ணத்தால் அவர் அத்துன்பங்கள் அனைத்தையும் இன்பமாக்கி, 'இன்பமே என் நாளும் துன்பமில்லை’ என்று எக்களித்துப் பாடுகிருர் என்ருல் அஞ்சா நெறியிலும், ஆண்டவன் அன்பு அணைப்பிலும், அருள் நெறியிலும், கவிதை ஊற்றிலும் அவ்வப்பரடிகள் வழிவந்த பாரதியார் அந்த நிலையினின்றும் மாறுவாரோ? அவர் உள்ளமும் எத்தன கோடி இன்பம்’ என்றுதான் நினைக்கிறது; வாய் பாடுகிறது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! சித்தினை அசித்தொடு இணைத்தாய்-அங்குச் சேரும் ஐம்பூதத்து வியனிலை சமைத்தாய் அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பல அழகுகள் சமைத்தாய் என்று பாடி அவர் எங்கும் இன்பமும் அழகுமே தாண்டவ மாடுகின்றன என மகிழ்கின் ருர். இந்த மகிழ்ச்சி. உள்ளம் என்றும் வாழுமுள்ளமல்லவா? எனவே பாரதி என்றும் வாழ் கின்றவரானர். - கடவுள் நெறியினைப் பற்றி மட்டுமன்றிப் பாரதியார் காதல் நெறியினையும் சாகா நிலைக்குக் கொண்டுசெல்கின்ருர், காதலும் கடவுளைப் போன்றதே-என்றும் சாகாதது. ஏதோ கண்டதும் காதல், விண்டதும் பிரிவு” என்ற மேலை நாட்டு நாகரிகச் சேற்றில் மூழ்கியுள்ள பலருக்கு அக் காதலின் தெய்வீக சக்தி புரியாததுதான். எனினும் என்றும் வாழ்கின்ற கவிஞர் இக் காதல் தெய்வம்போல் என்றென்றும் அழியாது வாழ்வது என்றே காட்டுகின்றனர்.