பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிாரதி-என்றும் வாழும் கவி 155 இம்மைப் பிறப்பில் பிரியலன் என்றேனல் கண்ணிறை நீர்கொண் டனள் என்று திருவள்ளுவர் காதல் வாழ்வு இம்மையில் மட்டுமன்றி வழி வழியாக வருகின்ற பிறவிகள்தோறும் பற்றி நிற்பது என்பதை எடுத்துக்காட்டுவர் இக் காதலைப் பாடவந்த மற்ருெரு புலவர் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' என்று காமத்தின் எல்லையற்ற பெருவாழ்வையும் முடிவிலா ஆற்றலையும் அதன் எல்லை காணமுடியாத உயிர் நிலையையும் விளக்கிக் காட்டுவார். இத்தகைய நல்ல பண்பட்ட புலவர் மரபில் வந்த கவிஞர் பாரதியார் காதல் சாகாவரம் பெற்ற தென்று காட்டிப் பலவகையில் விளக்கி அச்சாகாக் காத லின் தனிச் சிறப்பியல்புகளையெல்லாம் விளக்கித் தாமும் சாகாவரம் பெற்றுவிட்டார். உண்மைக் காதல் மனிதனைச் சாகாமல் வாழவைக்கும் என்ற உண்மையை உணர்ந்தவர் பாரதி. காதலால் கவலை நீங்கும்-கலைவளரும் - கவின்பெருகும்-வாழ்வு மலரும்-வளங் கொழிக்கும். இவற்றைத் தொடுத்து அவர், காதலினல் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலிளுல் மானுடர்க்குக் கவிதை யுண்டாம் கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம் ஆதலினல் காதல் செய்வீர் உலகத் தீரே அஃதன்ருே இவ்வுலகத் தலைமை இன்பம் காதலினுல் சாகாமல் இருத்தல் கூடும் கவலைபோம் அதேைல மரணம் பொய்யாம் என்று எடுத்துக்காட்டி, கடவுளர் சத்தியொடு பொருந்தியே வாழ்கின்ற நெறியைக் காட்டி அக் காதல் வெறும் ஏட்டி லன்றி நாட்டில்- உள்ளத்தில் உருப்பெற வேண்டும் என்கின் ருர். காதலில் விடுதலை இல்லை என்பதையும் அவ்வாறு விடுதலை வேண்டும் மேலைநாடுகளில் அது பொய்யாகவே கழிகின்ற