பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வெள்ளிவிழாச் சொற்பொழிவுள் சமுதாயத்தில் எத்தனையோ சிக்கல்கள் தோன்றுவது இயல்பே. பல்வேறு சூழல்களுக்கும் மாறுபாடுகளுக்கும் இடை யிலே சமுதாயத்தில் அடிக்கடி பலப்பல சீர்திருத்தங்கள் செய்யவேண்டிய தேவை உள்ளது. உடல்நோய் தீர்க்க மருத்துவன் தேவைப்படுவதுபோன்று, சமுதாயமாகிய பேருடம்புக்கு உண்டாகும் துன்பங்களைத் தீர்க்க அவ்வப் போது மருத்துவர் தேவையே. அம்மருத்துவர்களாகத்தான் கவிஞர்களும், புரட்சி வீரர்களும், நாடாளுவோரும், பிறரும் வந்து தோன்றுகின்றனர். புரட்சிக் கவிஞராகிய பாரதியும் நம்நாட்டுச் சமுதாயத்தில் வேண்டாதனவாக மலிந்துகிடக் கும் கொடுமைகளை நீக்கவேண்டுமென்று பலப்பல இடங்களில் எடுத்துரைக்கின்ருர். மக்கட் சமுதாய வாழ்வு என்றென் றும் செம்மையுற்றுத் திகழ வேண்டுமானல் சில திருத்தங் கள் செய்ய வேண்டுமென்கிருர். அவைகளைப் புதுமைப் பெண், தொழில், நாட்டுக் கல்வி, செந்தமிழ்நாடு, தமிழ்ச்சாதி முதலியவற்றுள் விளக்குகின்ருர். உலகச் சமுதாயம் போரின் றியும் தீதின்றியும் செம்மை நலம் பெற்றுச் செழிக்க வேண்டு மால்ை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் வேற்று மக்களிடம் மாறுபாடு காணுராய் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒருமை உணர்வில் வாழ்வதோடு, அவ்வந்நாட்டையும் அவரவர் நாட்டையும் அவரவர் தாய். மொழியையும் சிறக்கப் போற்றி வளர்க்க வேண்டும் என்கின்ருர். பெற்ற தாயும் பிறந்த பொன்டுைம் கற்றவ வானினும் கனிசிறந் தனவே என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கே தாய் என்பது தாய்மொழியாகும். இவ்வாறு மொழியையும் நாட்டையும் வளர்க்க எல்லாவகையிலும் பாடுபட வேண்டும் என்றும் அவ்வாறு பாடுபடாதவர் வாழத் தகுதியற்றவர் என்றும் காட்டுவர் கவிஞர்.