பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159. பாரதி-என்றும் வாழும் கவி தமிழ் நாட்டை எண்ணும்போது அவருக்கு அதன் பழமையும் சிறப்பும் நினைவுக்கு வருகின்றன. அதில் வாழ்ந்த தூய புலவர்கள் ஒருவர் பின் ஒருவராய் அவருக்குக் காட்சி தருகின்றனர். தமிழ் நாட்டு வாணிக வளனும் பிறவும் தெரிகின்றன. அவற்றை எல்லாம் கூறிய பாரதி அவை செழிப்புறச் செய்வதே இன்றைய தமிழர் கடன் என்பதை யும் சுட்டிக் காட்டுகின்ருர். சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் என அவர் ஆணையிடுகின்ருர், அப்படியே, திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கம் செய்தல் வேண்டும் என்ற உயர்நிலையில் அமையவேண்டிய இலக்கிய வாழ்வியல் படைப்புக்கள் பற்றியும் பாடுகின்ருர். தமிழ்ச் சாதி உய்ய வழிகாட்டவும் சாகாது வாழ வழி வகுக்கவும் அவர் தவற வில்லை. நம்மு தாதையர் நலமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு என்பது அவர் வாதம். ஆம். தமிழர் அந்த அடிப்படையை மறந்தமையால்தான்-தம்மரபினைத் தவறவிட்ட காரணத் தால்தான் "ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்” வாழ்கின்ருர் என அவர் உள்ளம் நைகின்றது. இந்த நிலை மாறின், பழம் பண்பு-வள்ளுவர் காட்டிய பண்பு, அறம், நாகரிகம், கல்வி, அறிவு அ ன .தும் போற்றப் பெற்று வாழ்வில் மலருமாயின் தமிழ் மரபும் அதன் வழியே பாந்த பாரத மரபும் ச. கா வரம் பெற்று வாழும். அதைக் காணவே