பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

urtಣ–ri೨b வழும் கவி 163. என்பது அற்று, சுயநலமற்று வாழத் தொடங்கில்ைஇறைவன் நம் உள்ளே ஒளிவிடுவான். இந்த இன்பம் அனுபவத்தால் பெறுவர். பெற்றவர் பாரதி; பெற்றதன் பயனே சாகா வரம். இந்த உயர் நிலைக்கு அடிப்படை என்ன? அதையும் பாரதி சொல்லத் தவறவில்லை. மிகக் சாதாரணமாக எல்லோ ரும் அறிந்த உண்மைதான்; ஆனல் ஏற்றுக்கொள்ள மறுக் கின்ற உண்மையும்கூட, 'கடவுள் அவதாரங்களாக வந்தவர் களும்கூட முடிவெய்தினர்கள்;ஆல்ை நான் சாகாதிருப்பேன்’ என்கிருர். அவர் வாக்கிலேயே காண்பது வீறு பெறுவ தாகும். சிலுவையிலே அறையுண்டு யேசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் பலர்புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான் பார்மீதில் யான்சாகாதிருப்பேன் கண்டீர் மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான் மடிந்தாலும் பொய்கூறேன்; மானி டர்க்கே நலிவுமில சாவுமில கேளிர் கேளிர்! நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை: அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவுமங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே வென்றிடுவீர் மேதினியில் மரண மில்லை இவ்வாறு மிக எளிமையில் சாகாமைக்கு மருந்து கண்டு விட்டார் பாரதி. அச்சம், வேட்கை, சினம், கவலை, பொய் இவை அழிந்தால் இடர் ஏது ? சாவேது? அழிவேது? அல்லல் ஏது? இவற்றுள் மிக முக்கியமாகச் சினத்தைக் கொல்ல வேண்டுமென்கின் ருர், பாரதி வாழ்விலே சினம் காட்ட முடி யாதென நினைக்கின்றேன். இச்சினத்தைப் பற்றித் திருவள் ளுவா,