பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í64 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் சினம் தன்னைச் சேர்ந்தவரைமட்டுமன்றி அச் சேர்ந்த வரைச் சேர்ந்தார் பலரையும் ஒரு சேரக் கொல்லும் என்கின்ருர். அதற்கு, சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற பெயர் சூட்டுகின்ருர். எனவே பாரதி காட்டிய வழியில் எத்துணை உண்மை உண்டு என்பது புலப்படுகிறதன்ருே? அச் சேர்ந்தாரைக் கொல்லியாகிய சினத்தை நீக்கியமை யாலேதான் வள்ளுவரும் பாரதியும் சாகா வரம் பெற்று வாழ்கின்றனர். . அச் சினத்தை நீக்கப் பாரதி பொறுமை வேண்டும் என்கின்ருர். திருத்தணிகை மலைமேலே குமார தேவன் திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளிர் திருத்தணிகை என்பதிங்குப் பொறுமை"யின்பேர் செந்தமிழ்கண் டீர்பகுதி தணிஎ னும்சொல் பொருத்தமுறும் தணிகையில்ை புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் அருத்தமிக்க பழமொழியும் தமிழில் உண்டாம் அவனியிலே பொறையுடையான் அவனே தேவன் என்று பொறுமையே வாழ்வின் அடிப்பட்ை எனக் காட்டி நின்ருர். ஆம், அவர் மற்றவர்களுக்கு அவ்வாறு விளக்கிக் காட்டியதோடன்றி, தாமும் வாழ்ந்து காட்டினர். தாம் மட்டும்வாழவேண்டும் என்ற சுயநிலையிலன்றி, தாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக’ என்ற பெருநிலையிலே உலகையே தம்வழி அழைத்துச் செல்லவே இவ்வுண்மைகளையெல் லாம் உலகத்தாராகிய நம்மையெலாம் அழைத்துக் காட்டு கின்ருர், தாமே வாழ்ந்து காட்டியும் சாகா வரம் பெற்ருர்; நம்மையும் வாழ அழைக்கின்ருர். இத்தகைய புருட ராகப் பாரதி விளங்கிய காரணத்தினலேதான் அவரது