பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி-என்றும் வாழும் கவி 165 பாடல்கள் சிரஞ்சீவியாக அமரத்துவம் பெற்று வாழ்கின்றன. அவை வாழ்வதோடு அவற்றை ஆக்கிய தம் தலைவனகிய பாரதியையும் வாழவைக்கின்றன. முதலில் நான் சொன்ன படி, இறுதியாக அப்பாரதியார் சாமிநாத ஐயருக்குக் கூறிய அதே அடிகளை அவருக்கும் கூறி அமைகின்றேன். பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்கெஞ்சில் வாழ்த்தறிவாய் இறப்பின்றித் துலங்கு வாயே என்று பாரதியை நான் வாழ்த்துகிறேன். தமிழ் உள்ள வரையில், ஏன்?உலகில் மொழிஉள்ளவரையில், மக்கள் இனம் உள்ளவரையில், உயிர் வாழ்க்கை உள்ள வரையில் ப்ாரதி வாழ்வார்-அவர் புகழ்வாழும்-கவிதை; வாழும்; இன்பம் வாழும்; எல்லை இல்லா அறம் வாழும். இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து நாட்டை யும் மொழியையும் வளம்படுத்திய பாரதியின் வரலாறு இன்னது என்பதையும், அவர் வந்த கவிஞர் மரபு எத்த கையது என்பதையும், கவிதை என்பது யாது என் பதையும், அது காலத்தை வென்று வாழ்வது எவ்வாறு என்பதையும், அக்கவிதையையே தம் தலைவியாகக் கொண்டு பாரதி செய்த பணி என்ன என்பதையும் கண் டோம். அப்பணியின் அடிப்படையில் அவர் சாகாவரம்: பெறத் துணையாயிருந்த பல்வேறு பொருள்கள் பற்றிய பாடல்களை ஒன்றன் பின் ஒன்ருகக் கண்டு உயிரும் சமுதாய மும் உற்று வாழ அவர் வகுத்த வழியையும் கண்டு, இறுதி யாக அவரே சாகாதிருக்கக் காட்டிய வழியையும் கண்டோம்’ அவர்தம் புகழ் சிறப்பதாக வாழ்க பாரதி நாமம் வளர்கஇப்பாரதி தமிழ்ச்சங்கத்தின் பணிகள்!