பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 நேற்று இன்று நாளை படுத்தி அதற்குள் தன்வாழ்வை வகுத்துக் கொள்ள எண்ணு கின்ருன்; அவ்வளவே! இவ்வாறு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூன்று காலங்களை இலக்கண மரபு ஒட்டிப் பிரித்தாரேனும் சில ஆய்ந்த அறி வுடையார் காலத்தை இரண்டெனவே கூறுவர். நிகழ்காலம் என்ற ஒன்று நிலைக்க முடியாத-நினைக்க முடியாததாகும் என்பது அவர் கூற்று. நான் நிற்கிறேன்’ என்றும் நான் படிக்கிறேன்’ என்றும் சொல்லும் போது அத்தொடர் முடிந்தவுடனே அது இறந்த காலமாகிவிடுகின்றது. செயல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒருசிலவற்றிற்கு நிகழ்காலம் பொருந்து மேனும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கூறிமுடிக்கு முன் இறந்தகால எல்லையை அடைந்து விடுகின்றன. இறப் பில் நிகழ்வு அடங்கவேண்டும் என்ற உண்மை விரைவில் நிறைவேற்றப் படுகிறது. நிகழ்வு’ என்று சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடிையின் செயலும் அடுத்த விடிைஇறந்த கால எல்லையில் முடிவதை நம்மால் உணர முடிகின்றது. ஆனல் இறப்பும் எதிர்வும் இந்நிலைக்கு மாறுபட்டவையன்ருே! இறப்பு என்றும் இறப்பாகவே இருக்கும். எதிர்வும் சிலகால மாவது அவ்வாறு இருந்து பின் நிகழ்வினை விரைந்து கடந்து இறப்பின் ஒன்றும். சில எதிர்கால நிலைகள் என்றும் எதிர்கால நிலைகளோ என்னுமாறு வாழ்வது உண்டு. இவற்றை நோக்க “நிகழ்வு’ என்பது நிலையற்ற ஒன்றே என்பது தெளிவு. இந்த அடிப்படையில் இன்று' என்ற ஒன்றே வேண்டாம், இறப்பும் எதிர்வுமே போதும் என்பர் சிலர். ஆயினும் இந்த நிகழ்வு சிறந்த ஒன்றற்குப் பயன்படுகின்றது. பின் நிகழ்வுதான் எதற்காக? எல்லாக் காலத்திலும் வாழ்கின்ற பொருளை எக்காலக் குறியீட்டால் உணர்வது? ‘கடவுள் இருந்தார்’ என்ருல், இப்போது இல்லையா?’ என்ற வின எழும். இருப்பார்’ என்ருலும் அப்படியே. ஆனல் 'இருக்கிருர்’ என்ருல் முன் இல்லையா? பின் இராரா? என்ற வினுக்கள் எழுவதில்லை. அப்படியே காற்று இருக்கிறது-கடல்