பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் இருக்கிறது- ஆறு ஒடுகிறது என்பன போன்ற நிகழ்கால முடிவுகள் அவை கால எல்லையைக் கடந்து வாழ்ந்து ஒத்து இயங்குகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்து கின்றன. இந்த உணர்வினப் பெறவே-என்றும் வாழ்வன இவை என்ற தன்மையைக் காணவே இந்த நிகழ் காலம் பயன்படும் என்பர். இந்த அடிப்படையில்தானே இலக்கண அறிஞர், முக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச் செப்புவர் நிகழும் காலத் தானே (நன். 383) என விதி செய்தனர் என நினைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஆராய்ந்து காணும் நிலையில் இலக்கண மரபிைேர் ஒரு வகையில் செல்ல, சமுதாய வாழ்விலும் சமய உணர் விலும் தம்மை மறந்த நல்லவர்கள், சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பிணைத்து, அவற்றின் வாழ்க்கை நிலைகளை யெல்லாம் நமக்கு உணர்த்துவது நிகழ்காலமே என்பர். இந்த உண்மையினைத்தான் சேக்கிழார், சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனியெதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதல்ை என்றைக்கும் திருவரு ளுடையேம் (திருஞான 659) என்று பாண்டி நாட்டை வாழவைக்கும் வகையில் பாட்டி சைத்துள்ளார். எனவே காலம் மூன்ருகத் தெளிவு படுத்தி: யிருப்பது தேவையானதே என்ற அமைவோடு மேலே செல் வோம். இவ்வெள்ளி விழா நிகழ்ச்சியில் அமைந்துள்ள நமது பேச்சு . வரிசையில் இஃது இறுதியாக உள்ளது. தொல் காப்பியர் காலந் தொடங்கிப் பாரதியார் காலம் வரையில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்த வகையினை ஒரளவு கண்ட