பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் 17 ஐந்து திணை அகத்திலே ஒத்த உள்ள உணர்வால் சிறப்பன: அப்படியே புறத்தும். ஈண்டுத்திணை என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்றே பொருள். இந்த வகையில் ஒழுக்கத்தின் அடிப்படையில் வாழ்வினைப் பிரிப்பதை வேறு எங்கே காண முடியும்? அகவொழுக்கம், புறவொழுக்கம் என்ற விரிந்தஅடிப் படையில் அமைவதோடு, களவொழுக்கம் கற்பொழுக்கம் என்ற உட்பிரிவுகளையும் காண்கின்ருேம். இன்னும் விரிவாகக் குறிஞ்சி ஒழுக்கம், பாலை ஒழுக்கம் என்று திணை ஒழுக்க நிலை களையும் காண்கிருேம். எனவே தமிழ் மக்கள் வாழ்வு-அக வாழ்வாயினும் சரி, புறவாழ்வாயினும் சரி ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைந்து நின்றது-நிற்கின்றது என்பது தேற்றம். அப்படியே ஒவ்வொருதிணைக்கும் நிலத்தையும் காலத்தை யும் அறுதியிட்ட சிறப்பும் எண்ணத்தக்கது. இன்னின்ன ஒழுக்கம் இன்னின்ன நிலத்தும் இன்னின்ன காலத்தும் சிறக்கும் எனக் கணக்கிட்டு அவற்றின் வழியே வாழ்வமைத் தனர். மேலும் அவ்வவ்வொழுக்கத்தின் அடிப்படையிலேயே அவ்வந் நிலத்துக்கும் பெயரிட்டனர். அவ்வந் நிலத்து ஒழுக்கத்தையே அததற்கு உரிமையாக்கி, அவற்றை உரிப் பொருள் எனவே அழைத்தனர். இதே வகையில் புறத் திணைகள் அமைவதையும் காணலாம். இவ்வகப் பொருளைப் பற்றி மற்ருெரு முக்கியச் சிறப்பையும் இங்கே காணல் வேண்டும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் ருகும் (பொரு. 27) என்பது தொல்காப்பியம். இதற்கு உரை கூற வந்த நச்சினர்க் கினியர், "ஆணும் பெண்ணுமாய்ப் போகநுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியும் இன்பம் நுகர்ந்தா ரெனப் படாது அவ்வின்பம் எல்லா உயிர்க்கும் பொதுவென்பதும் இரு பாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்தும் என்பது உம் கூறியதாயிற்று” எனக் காட்டுவர். இதல்ை இன்பம் புல் மர முதலாகிய ஒரறி