பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் காணுத பல இன்று காணப் பெறுகின்றன. ஆனல் இவை. பற்றி யெல்லாம் நேற்று அறிந்தோர் கூறினல் நாம் எள்ளி நகையாடினேம். 'இராவணன் விண்ணிலே பறந்தான் என்ருல் எத்தனை பெரும் பொய்’ என்று ஏளனஞ் செய் தோர், இன்னும் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். வலவன் ஏவா வானவூர்தி என்ற புறப்பாட்டைப் பொய்ப் பாட்டு என்று பேசியவாய் இன்னும் நாட்டில் சுவைத்துக்கொண் டிருக்கிறது. இப்படியே இன்னும் எத்தனை எத்தனையோ இவற்றையெல்லாம் ஆராயும்போது பழைய அனைத்தும் பொய் யென்ருே கொள்ளத் தகாதவை என்ருே அன்றி அப்படியே போற்றப்படவேண்டுவன என்ருே நாம் நம்ப முடியாது. அப்படியே நாளைபற்றிக் காணும் கனவும் நனவும் அனைத்தும் சிறந்தன என்ருே அல்லது பயனற்றன என்ருே கொள்ளவும் முடியாது. எனவே நேற்றைய வாழ்வையும் நாளைய வாழ்வையும் இன்றைய வாழ்வொடு இணைத்துப் பார்க்கின்றபோது எத்தனையோ உண்மைகளைக் காண இயலும். எண்ணிப் பார்த்து ஏற்பன செய்ய உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். - தமிழ் மொழி இலக்கிய வழியே ஒரு சிறிது எண்ணிப் பார்க்கலாம். பாரதி தமிழ்ச் சங்கத்தாருக்கு அதை எண் னிப் பார்க்க முழு உரிமை உண்டல்லவா? தமிழ் இலக் கிய மரபில் பழமைக்கும் புதுமைக்கும்-நேற்றைக்கும் நாளைக்கும் பாலம் அமைத்த பெருமை பாரதியாருக்கே உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் அவர்தம் பாடல் களில் பிழை கண்ட பெரியோர்களும் இருந்தனர். ஆனல் இன்று அவர் தம் பெயரும் அறியா வகையில் மறையப் பாரதி பார் உள்ளளவும் வாழும் தெய்வக்கவியாகி விட்டாரல்லவா இலக்கண மரபு காக்கப்படவேண்டிய ஒன்று. எனினும் அதற்காக இல்லாத மரபையும் பொல் லாத மரபையும் கட்டிக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு வளரும் இலக்கியத்தை-கலையை-வாழ்வைத் தடை செய் வது பொருத்தமானதாகுமா? ஆழ்ந்து நோக்கின் ‘இலக்கியங்.