பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்று இன்று நாளை 177: கண்டதற் கிலக்கணம் இயம்பலே மரபு. எனவே வளரும் இலக்கிய நெறிபற்றி வளமான இலக்கண மரபினைப் போற். றலே சிறந்த நெறியாகும். இவற்றின் அடிப்படை யாவும் மொழி இயலின் அடிப்படை மரபைக் கெடுக்காதிருக்கின் றனவா என்ற ஒன்றையே ஊன்றி நோக்கல் வேண்டும். தொல்காப்பியர் காட்டிய மொழி இயல் அடிப்படை கெடாத நிலையில் தமிழில் எத்தனை நூற்ருண்டுகள் கழித்தும் புதுப்புது இலக்கியங்கள் தோன்றினும்-அவற்றின் அடிப் படையில் இலக்கணங்கள் தோன்றினும்-அவை என்றென்றும். வாழும் என்பது உறுதி. ஆனால் இந்த அடிப்படை நிலையை மறந்து, மனம்போன வகையில் இலக்கியம் செய்வதாகச் சொல்லி அந்தப் பெயரையே கொலை செய்வதும் அதற் கேற்ற இலக்கண விளக்கங்கள் எழுதுவதும் நிலைகெட்டுக் காலத்தேவன் கையில் சிக்குண்டு சிதறுண்டு போகும். முன்ன தற்கு எடுத்துக்காட்டுப் பாரதியின் கவிதைகள். பின்ன தற்கு நாம் எடுத்துக்காட்டினைத் தரவேண்டா. தமிழ் இலக்கிய வரலாறு உங்கட்குப் பதில் சொல்லும். பாரதி பழமையான நேற்றைய இலக்கியங்களோடு நாளையும் வாழவேண்டிய இலக்கியங்களை எண்ணி, இன்று: நாம் ஆற்றவேண்டிய பணியினை எடுத்துக் காட்டுகிரு.ர். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மைவெறும் புகழ்ச்சி இல்லை என்று நேற்றுத்தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரும் புலவர்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிருர் பாரதி. ஆனல் இப் பழமையை எண்ணிக் கொண்டு இன்று வாழும் நாம் நம் கடமையை மறந்து விடுவோமே யானுல் நாளைய தமிழ் நாடு: என்னகும் என்பதையும் எண்ணிப் பார்க்கிருர்; உள்ளம். உணர்த்துகிறது. வாய்பாடுகிறது-நாமும் பாடுவோம்.