பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்சாப்பியர் காட்டும் வாழ்வியல் 19 லாதலின் நானும் மடனும் பெண்மைக்கே இயல்பாக அமை கின்ற காரணத்தினலே பின்னல் நாம் திருக்குறளில் காணு கின்ற பல ஒழுக்க நெறிகள் இத் தொல்காப்பியத்திலே இலக் கண மரபாகவே காட்டப்பெறுகின்றன. இந்த வாழ்வியலில் களவிலே இயற்கைப் புணர்ச்சி நிகழும் காலத்து நிகழும் மெய்ப்பாடுகளை எல்லாம் தொல்காப்பியர் முதலில் தொகுத் தும், பின் மெய்ப்பாட்டியலில் விரித்தும் கூறுகின்ருர். உள்ளக் கருத்துக்களையும் உணர்வுகளையும் இம்மெய்ப்பாடுகள் எவ்வெவ்வாறு விளக்குகின்றன என்பதெல்லாம் எல்லையற்ற பெரு விரிவினை உடையன. மனங்காவல் கொண்டதெல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே என்ற அடிப்படையில் காதல் வாழ்வின் அடித்தளமாகிய பார்வை பரிமாறுதல் தொடங்கி, களவிலும் கற்பிலும் தலைவனும் தலைவியும் வாழும் வாழ்வின் எல்லைவரை எண்ணி எண்ணி நமக்கு எழுத்தில் வடித்துத் தருகின்ருர் தொல்காப்பியர். களவியலில் தலைவி தன் கருத்தை வாயில்ை வெளிப்படச் சொல்லாளாயினும் கண்ணிலுைம் பிற செயல்களாலும் காட்டுவாள் என்ருலும், அவள் உள்ளம் கற்புநெறி நடக்கும் நில்ை ஏற்படின் என்னவள் என்பதைத் தொல்காப்பியர் காட்டத் தவறவில்லை. உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே (கள. 22). என்ற சூத்திரத்தில் தலைவிக்கு அனைத்தினும்-உயிரினும் மேம்பட்டது கற்பே என்றும், அக்கற்பின் நெறியில் தலைவி களவின்கண் தானே தலைவனிடத்துச் சேர்ந்தாலும், தலைவி பேசினும் அகப்பொருளாகவே கொண்டு அமைதி பெறத்தக்க