பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் 21. கனகமார் கவின்செய் மன்றில் அனகநா டகற்கெம் அன்னை - மனைவி தாய் தங்கை மகள்' (சித.செய்.கோவை, 33). என்கின்றனர். பின்வந்த சதகம் முதலியவற்றைப் பாடியவர் களும் இப்பண்புகளை யெல்லாம் தலைவிக்கு ஏற்றிக் காட்டுவர். எனவே தமிழ்ப் பெண்ணின் தளரா வாழ்வியல் தொல்காப்பி யரால் நன்கு காட்டப் பெறுகின்றது. இப்படியே தலைவனுக்கு உரிய பொருவிறந்த செயல்களை யும் நிலைகளையும் பண்புகளையும் தலைவியைப் பிரியாது அவ: ளொடு ஒன்றி வாழவேண்டிய சிறப்பினையும் பிரியநேரினும் உரியகாலத்தில்-அவளொடு இருக்கவேண்டிய பூப்பின் புறப் பாடீராறு நாளும்-பிரியலாகாநிலையினையும் இன்னும் பல வகையில் அமைந்த சிறப்புக்களையும் தொல்காப்பியர் ஆங்காங்கே சுட்டிக் காட்டுவார். அவை அனைத்தும் நன்கு அறியப்பெறும் நிலையினவாதலின் இந்த அளவில் அகத்’தை. நிறுத்திப் புறத்திணை இயலில் தொல்காப்பியர் காட்டிய வாழ்வியலைக் காணலாம். புறம் என்றவுடன் தமிழ் இலக்கிய மரபில் போர் நிகழ்ச்சி களே நம் நினைவுக்கு வரும். தமிழர்கள் ஒருவரோடொரு. வர் போரிட்டனர்; ஒற்றுமை அற்றவர். எனவேதான் புறநானூறு போன்ற போர்பற்றிய இலக்கியங்கள் உண்டா யின என்பர் பலர். ஆயினும் ஆழ்ந்து நோக்கின் இக்கருத்துத் தவறு என்பது நன்கு புலகுைம். தமிழ்ச் சமுதாயம் போர் விரும்பாச் சமுதாயமே என்பது நன்கு தெளிவுறும். தொல் காப்பியப் புறத்திணை இயலின்படி ஆராய்ந்தால் எத்துணை அளவு இயலுமோ, அத்துணை அளவு போரைத் தடுக்கவே அரசரும் பிறரும் முயன்றிருக்கின்றனர் என்பது நன்கு விளங்கும். பிற்காலத்தில் வந்த புறம்பற்றிய இலக்கண நூல்களாகிய புறப்பொருள் வெண்பாமாலை முதலியவை போரையே வலியுறுத்திலுைம்கூட, தொல்காப்பியம் போரைத் தடுக்கும் நெறியையே விளக்கித் தருகிறது.