பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺况 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் இவற்றின் விளக்கமெல்லாம் எல்லையற்றுப் பெருகுமாதலின், ஒரளவு தொட்டுக்காட்டி மேலே செல்கிறேன். அகத்தைக் கூறிய ஆசிரியர், அதற்குப் புறமாகவே புறத்தைக் கூறுகின்ருர்.ஒவ்வோர் அகத்திணைக்கும் ஒவ்வொரு புறத்திணை அமைத்து, அகத்திணைகள் எவ்வெவ்வாறு புறமாக அமைகின்றன வென்பதையும் குறிப்பால் உணர்த்திச் செல்லு கின்ருர் தொல்காப்பியர். உரையாசிரியர் நச்சினர்க்கினியர் அவற்றின் தொடர்புகளை யெல்லாம் விளக்கிக்காட்டுகின்ருர். இங்கு அத்திணை அமைப்புக்கள் வழி அவை எவ்வாறு தமிழ்ச் சமுதாயம் போர் விரும்பாதிருந்ததை விளக்குகின்றன எனக் கண்டு அமைவோம். தமிழ் மரபில் முதலாவதாக வெட்சி அமைகின்றது. வெட்சி என்பது ஊர்ப்புறத்து இருக்கும் பசுக்களைக் கொண்டு வருதல் என்ற அடிப்படையில் அமைவது. ஏன் பசுக்களைக் கொண்டுவரவேண்டும் ஊரின் புறத்துள்ள பசுக்களைக் கொண்டுவருவதும் ஒரு போராகுமா? ஆம், அது போரன்றுபோரைத் தவிர்க்கப்பயன்படும் பெருநெறி. ஒரு மன்னன் மற்ருெரு மன்னனெடு மாறுபட்டானுயின் அவன் எப்படிப் போர் செய்வது? போர் எதற்கு என்பதை அடுத்த சில திணை களில் தொல்காப்பியர் விளக்குவர். அப்போர்களைத் தடுக்க அமைந்த அடிப்படைத் திட்டமே இவ்வெட்சி. இன்று எங்கோ ஒருசிறு நாட்டில் நடக்கும் போர் உலகை நடுங்க வைக்கிறது. ஆயினும் அன்று அந்த நிலையில்லை. நாட்டி லேயே போர் நடந்தாலும் அந்நாட்டு மக்களது அன்ருட வாழ் வியலில் யாதொரு மாறுபாடும் காணவியலாது. மாற்ருன் ஊரின் புறத்துள்ள பசுக் கூட்டத்தைக் களவிடை ஒருமன்னன் கொண்டுவந்து விடுவாயிைன் அவன் வெற்றிபெற்றவன கின்ருன். அன்றி மாற்று வேந்தன் அதை அறிந்து, தடுத்து, பசுக்களை மீட்பாயிைன் அவனே வென்றவனுகின்ருன். எனவே வெற்றி தோல்வி ஒரிரவில் ஒரு சிலருடன் நடை பெறும் சண்டையாக முடிவுறுகின்றது. வென்ற நாடும் தோற்ற நாடும் பின்னும் மாறுபாடு கற்பிக்காது மகிழ