பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியா காட்டும் வாழ்வியல் 23 வேண்டுவன. அகத்திணையில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் நடைபெறும் ஊடலும் கூடலும் போன்றே இஃது அமைந்து நாட்டில் நடைபெறத்தக்க பெரும் போர்களைத் தவிர்க்கின்றது. மாற்ருர் நாட்டிலிருந்து கொண்டுவந்த பசுக்களை என் செய்வது? பங்கிடுவதா? பொசுக்குவதா? வேறு வகையில் பயன்படுத்துவதா? அது தமிழ்நாட்டு அரசியல் வாழ்வன்று. அப்பசுக்களைக் கொண்டுவந்து ஒம்புதல் வேண்டும். ஒம்பு தல் என்ற சொல் உயர்ந்த நிலையில் பயன்படுத்தப் பெறுவது. வேந்துவிடு முனஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஒம்பல் மேவற் ருகும் (புறத். 2) என்பது தொல்காப்பியம். களவில் கொண்டு வருவதால் வீண் போரும் பிற கொடும்ைகளும் இல்லை. இவ்வளவு எளிமையாக இம்முறை நாட்டுப் போர்களைத் தவிர்க்கின்றது. இந்த உயர் வாழ்வின் இறுதியில் போர் தவிர்க்க உடனிருந்த கொற்றவையைப் பரவிய காட்சியையும் காண்கின்ருேம். அடுத்துவருகின்ற திணை'வஞ்சி'யாகும். முன்கண்டபடி இரு மன்னரும் உள்ளத்து மாசு நீங்கி ஒன்றிவாழக் கடமைப் பட்டவர். ஆயினும் ஒருவன் மண்ணுசை கொண்டு போர் செய்யத் தொடங்குவானுயின் அவனைச் சென்று அடக்க நினைப்பதே 'வஞ்சி'யாகும். சீனரையும் பாகிஸ்தான் மக்களை யும் நாம் ஒடுக்க நினைத்த நிலையே அது. நாம் மண்ணுசை கொண்டவரில்லை. அதே வேளையில் மண்ணுசை கொண்ட மற்றவரை மடக்காவிட்டால் உலகில் அறம் தழைக்காது. எனவே வஞ்சி தேவைப்படுகிறது. இதனைத் தொல்காப்பியர். எஞ்சா மண்ணுசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகச் சென்று அடல்குறித் தன்று (புறத். 10) எனக் காட்டுவர். அடல்குறித்தன்று” என்று போர்க்குச் செல்லக்கருதல் என விளக்குவர். அக்குறிப்பின் வழி மாற்ருன்