பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் அடங்குவானுயின் போர் நடைபெருது என்பது தேற்றம். மன்னருக்கு மண்ணுசை தம் நாட்டளவில் அமையவேண்டு வதே. ஆயினும் அஃது இடையருது வளர்வது கூடாது என்பதையே எஞ்சா மண்ணசை’ என விளக்கினர். அடல்’ என்னது, அடல்குறித்தன்று என்ற தல்ை போர்மேல் செல்லாது, போர்குறித்துப் பேசுதல் அன்றி ஆய்தல் எனவே குறித்து, அதன்வழி இவன் வலியறிந்த மாற்று மன்னன் தன் மண்ணுசையை விட்டு அமைதியாக நாடாள்வான் என்பது கருத்தாகும். அடுத்துவரும் உழிஞைத்திணை இதனினும் ஒருபடி மேலே செல்லுகின்றது. ஒருவேளை முன்கண்டபடி மாற்று வேந்தன் அமைதியுருது தன் நடவடிக்கைகளைப் பெருக்கிப், போருக்குத் திட்டமிடுவானுயின் அவனைத் தடுத்தல் நல்லரசர் கடன். அப்பொழுது அவர்கள் மதிலை முற்றுகை இட்டு, யாதொரு சேதமும் உண்டாக்காமல், கொள்ளவேண்டுவதே உழிஞை யின் பணி. புறநானூற்றில் மாற்ருர் நாடும் அழிவுற்ற வகையில் பலபாடல்கள் இருப்பினும், தொல்காப்பியர் இந்த அமைதியையே சுட்டிக் காட்டுவர். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் ருகு மென்ப (புறத். 10). என்பது அவர் வாக்கு. எனவே அரணில் யாதொரு சில குறை பாடும் அழிவும் உண்டாகாமல் முற்றுகையிட்டு, அதைக் கைக்கொள்ள வேண்டலே கடன் என்பது தெளிவு. பின் அந்த மாற்று வேந்தனுக்கு அறிவுறுத்தி, அவனுக்கே அந்: நாட்டை அளித்தல் மரபு. இந்த மரபினைக் காத்த மன்னர் களைத் தமிழ்நாட்டு இடைக்கால வரலாற்றிலேயும் நாம் காண்கிருேமே. - - அடுத்துவரும் 'தும்பை போரைப்பற்றிக் கூறுவது. மேற். கூறிய நிலைகளிலெல்லாம் மண்ணசை உடைய வேந்தர் பணியவில்லையாயின் கடைசியில் போர்தானே. ஆயினும்