பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் 25. அப்போரிலும் கருணையே காட்டப்பெறுகிறது. இன்று போய் நாளைவா என்று காட்டிய கருணையை மதிக்காத இராவணன் பட்ட நிலையினையே போர் மேற் செல்லும் வேந்தர் அடைவர். தன் பலம் பெரிது. பலம் அளவிடற்கரிது எனக் கருதி, மாற்ருரை அழிக்கத் திட்டமிட்டுப் படை எடுத்து வருவ னயின், அப்போது ஆற்றியிருத்தல் அரசரின் வாழ்விய லாகாது. அப்போது அரசன் சென்று மாற்ருன் படை நிலையைக் கெடுத்து, வெற்றிகண்டு, அவனுக்குக் கருணை காட்டுவதே தும்பை. பிற்காலத்தார் பொருவது தும்பை' எனப் போரே குறிக்கோளாகக் கூறினர் ஆயினும், தொல் காப்பியர் அவ்வாறு காட்டாது, மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்று தலையளிக்கும் சிறப்பிற் றன்று (புற. 15) எனவே காட்டுவர். இதில் தலையளி’ என்பதை, தலைஅழி' என்றும் பாடம் காட்டுவர். ஆயினும் தொல்காப்பியரது உள்ளக்கிடக்கையை ஆராயின் அது பொருந்தாது. மாற்று வேந்தனைப் போர் நெறியில் செல்லாது மடக்கி வெற்றி கண்டு பின் அவரிடம் கருணைகாட்டி அவனை வாழ்விப்பது தமிழர் வாழ்வியல். பேர்க்களத்து மிக்கோர் செருவென்றது வாகை என்பர் பிற்காலத்தார். ஆனல் தொல்காப்பியர் போரையே நிறுத்து கின்றவராதலின், அதில் வெற்றி யெங்கே தோல்வி யெங்கே? ஆகவே, - தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தலே (புறம் - 14) வாகை எனக் காட்டுவர். காட்டி, வெறும் போரில் மட்டும் அல்லாது வாழ்வியலில் வரும் ஒவ்வொரு துறையாளரைப் பற்றியும் காட்டி, அவரவர் வாழ்வாங்கு வாழும் வகையில் தொ-2 -