பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. காமமோ பெரிதே' ೩.ಒau கண்டதும் சிலருக்கு வியப்புத் தோன் றுதல் இயல்பு. இதைப் பற்றிப் பேச ஆயிரம் கல் தாண்டி ஒருவர் வரவேண்டுமா?’ என்று கேட்கவும் தோன்றும்? அதுவும் தமிழ்ச் சங்கத்தில் அதுபற்றிப் பேசவேண்டுமா என்ற ஐயம் எழும். எனினும் அறம் பொருள் இன்பம் வீடு என்ற வாழ்வின் பலன்களைக் கூறும்போது, அவற்றுள் ஒன்றை விட எனக்கு விருப்பமில்லை. மேலும் எவ்வளவுதான் வெளி யில் பேசக் கூசினலும் எல்லா மக்களும்-ஏன்?-எல்லா உயிர் களும் இக்காமத்தைச் சார்ந்தே வாழ விரும்புகின்றன. எனவே அதுபற்றியும் எண்ணல் ஏற்புடைத்தே. காமம் என்ற சொல்லைப் பற்றியும் அதன் பொருளைப் பற்றியும் வெறுக்கும் வகையில் சிலர் எண்ணுகின்றனர். இச் சொல் தமிழ், வடமொழி இரண்டிலும் பயின்று வருகின்றது: இரண்டிடத்தும் வேறு வேறு பொருள்களிலே இச்சொல் எடுத்தாளப் பெறுகின்றது என்பர் அறிஞர். காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்' என்று மிக வெறுப்பொடு அக்காமமே நோய்களுக்கு அடிப்படை யான கொடுமை வாய்ந்தது என்று காட்டிய அதே வள்ளு வனர், தமது மூன்ருவது பாலைக் காமத்துப்பால்' என்றே