பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் நிறுத்திக் காமம்’ என்ற சொல்லையும் உயர்ந்த பொருளில் பலவிடங்களில் வழங்குகிருர் என்பதை அறிவோம். எனவே திருவள்ளுவர் முன்னுக்குப் பின் முரணுன வகையில் இரு வேறு வகைப் பொருள்களில் அச்சொல்லினை எடுத்தாளு கின்ருர். மேலே நாம் காட்டிய குறள் வள்ளுவரது துறவற இயலில் துறவுக்கு அடுத்த நிலையில் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்து இறுதிக் குறளாக வருகின்றது. துறவு மனப் பான்மையே தமிழர் வாழ்வில் அருகிக் காண்பது. எனினும் வள்ளுவர் காலத்தில் வடமொழிவாணர்தம் கொள்கைகளும் நால்வகை ஆச்சிரம வாழ்க்கை நெறிகளும் தமிழ் நாட்டில் கால் கொண்டதோடு, பல சொற்களும் அப்படித் தமிழ் மொழி வழக்கில் இடம் பெறவுமாயின. காமம் என்ற சொல்லும் அவற்றுள் ஒன்று. அது வடமொழியில் பிறவி நோய் தருவது என்ற இழிந்த பொருளில் வழங்குகின்றது. வள்ளுவர் வடநூலார் மதம் பற்றிப் பல கருத்துக்களைக் காட்டுகிருராதவின் இதையும் அந்த அடிப்படையில் விளக் கினர். ஆனல் பின்வரும் காமத்துப்பால்’ என்ற தலைப்பும் அதில் பலவிடங்களில் வரும் காமம்' என்ற சொல்லும் தமிழுக்கே உரிய சிறப்புப் பொருளைக் கொண்டுள்ளன. (இவ் வாறு ஒரே வகையான சொல் இருவேறு மொழிகளில் வந்து வழங்கின் உண்டாகும் இடர்ப்பாடுகளைப் பற்றியெல்லாம் பின் வந்த புலவர்கள் வேடிக்கையாகப் பாட்டிசைத்துள்ளனர்.) தமிழில் உள்ள காமம்’ என்ற சொல் 'கமம் என்ற சொல் லடியாகப் பிறப்பது என்பர். கமம்' என்ருல் கிறைவு' எனப் பொருள்படும் எனவே காமம்’ என்பது நிறைவு தருவதாகும். உயிர் வாழ்க்கை, மண்ணில் பிறந்த உயிர்கட்கெல்லாம் நிறைவு தரும் ஒன்றேயாய் உயர்ந்துள்ளமையின் இஃது இப்பெயரொடு வழங்குதல் பொருந்துவதுதானே. தம்முள் ஒத்த அன்பால் பிணைந்த இருவரும் - தலைவனும் தலைவியும் - மனநிறைவுடையவராய் மற்றவைகளை மறந்து இருதலைப் புள்ளின் ஒருயிராக இயங்கும் வாழ்வினை வேறு எந்தவகையில் அழைப்பது? தொல்காப்பியரும் இதைக் காமக் கூட்டம் என்றே சொல்வார். இவ்வாறு நிறைவு பெருது நிற்பது