பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 35 எனக் காட்டுவர். எனவே இவர் இக்காமத்தின் இயல்பை நன்கு உணர்ந்து நமக்கு உணர்த்துகின்ருர். உணர்த்த முடி யாது உள்ளத்துணர்வாலேயே அனுபவிக்கும் இந்த அக வொழுக்கத்தால் அரும்பும் இன்பத்தை இதனினும் தெளி வாக எப்படி எடுத்துக்காட்ட முடியும்? இந்த ஈர் உவமை களையும் உற்று உணர்ந்தால் 'காமமோ பெரிதே' என்ற உள்ளுணர்வு நமக்குள் அரும்பும். இத்தகைய இன்பக் காமம் சில காலத்தில் துன்பம் ஆதலும் உண்டு. இதன் விளக்க இயல்பினையெல்லாம் பின் வள்ளுவர் வழியே காண்போம். ஈண்டுக் குறுந்தொகைப் புலவர் அதன் துன்ப நிலையைக் காட்டும் வகையினைக் காண் போம். தலைவனைப் பிரிந்த தலைவி வாடுகிருள். அவ்வாட்டம் அளவிடற்கரிது. எனினும் தோழி அவளை ஆற்றியிரு’ என்று தேற்றுகிருள். எப்படி அவளால் ஆற்றியிருக்க முடியும்? காமம் ஆற்றியிருக்கும் வகையில் அத்துணை எளிமையாக அமைந்ததன்ரு? தன் தலைவைெடு கூடியிருக்குங்கால் பெரி தாகத் தலையளி செய்த அக்காமம் அவனைப் பிரிந்த நிலையில் மெல்ல மெல்ல மறைகின்றதே என நைகின்ருள் தலைவி. எதுபோல் இல்லாகின்றது? ஈண்டும் குறுந்தொகைப் புலவர் உவமையைக் கையாளுகின்ருர். ஆம்! அந்த உவமைத் தொடரே தம்மை மறந்து தம் நாமம் கெட்ட அப்புலவர் தம் பெயராகவும் அமைந்துவிட்டது. மொழி, பண்பாடு, வாழ்க்கை நெறியில் தம்மை மறந்து பாடிய புலவர் இயற் பெயர் அறியவில்லை. எனவே பின்னவர் அவரைக் கல்பொறு சிறு நுரையார்' என்றே அழைத்து விட்டார்கள். இதன் கருத்தென்ன? தலைவனைக் காணுத் தலைவியின் காதல் ஒரு கல்லின்மேல் மோதிய சிறு நீர் நுரை எப்படி மெல்ல மெல்ல இல்லாகின்றதோ, அதுபோல மெல்ல மறைகின்றது. இதைத் தேற்றுவோர் உணரவில்லையே - உணர்ந்து தலைவனக் காட்ட வில்லையே எனக் கவல்கின்ருர். ஆம்! அது முற்றும் மறையு. முன் தலைவன் கூட்டம் இன்றேல் அவள் இறந்துவிடவுங் கூடுமல்லவா? இவற்றையெல்லாம் உள்ளடக்கிய அப்புலவர்,