பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@6 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் காமம் தாங்குமதி' என்போர் தாமஃது அறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் யாம்,எம் காதலற் காணே மாயின் செறிதுணி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் கல்பொரு சிறுதுரை போல மெல்ல மெல்ல இல்லா கும்மே (குறுந். 290) என்று அப்புலவர் காமத்தின் இயல்பு காட்டி அதனுள்ளே தாமும் ஒடுங்கிக் காமமாகிவிட்டார். இவ்வாறு கூடினரை எல்லையற்ற மகிழ்வே மகிழ்வாகத் திளைக்க வைத்தும் பிரிந்தாரை அதுவே முடிவாகச் செய்யும் நிலை தந்தும் உயர்த்தியும் தாழ்த்தியும் புணர்த்தியும் பிரித் தும் நலமும் அவலமும் காட்டும் இக்காமத்தின் இயற்கை நன்கு உணர்ந்த அறிவறிந்த சிறந்த புலவராகிய கபிலர் இதன் பண்பினைத் தெள்ளத் தெளிய விளக்க முற்பட்டு விட்டார். வேரர் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட! செவ்வியை யாகுமதி யார்அஃ தறிந்திசி னேரே-சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்குஇவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (குறுந் 18) எனக் காட்டுகின்ருர் கபிலர். இதைத் தோழியின் கூற்ருக காமத்தை ஆராயும் இயல்பற்றிய நிலையிலே-கூடின் எல்லை யற்றும் பிரிவின் கல்பொரு சிறுநுரையாயும் மாறும் இக் காம நிலையிலே-தலைவன் தலைவியைப் பிரியின் ஏதம் நேரு மென்று காட்டி அவன் விரைவில் தலைவியை மணந்துகொள்ள வேண்டுமென்கிருள் தோழி. இங்கே அவனை விளிக்கும் நிலையிலும் உவமை அளவிலும் அக்காமத் தியல்பினைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை கபிலர். வேர்ப்பலாவின் இனிய சுளை முயல்வார்க்குப் பயனளித்தல் போன்று இக்காமமும் முயன்று