பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 37. முயங்குவார்க்குப் பயனைத் தரும் என்ருர். இந்தக் காமத் தியல்பினை என்னென்பது? எனவேதான் அனைத்தும் அறிந்த கபிலரே காமமோ பெரிதே' எனக் காட்டிவிட்டார். நாமும் இன்றைய பேச்சுக்கு அவர் வாய்ச் சொல்லையே தலைப்பாகக் கொண்டுள்ளோம். எனவே இத்தலைப்பைப்பற்றி ஐயம் கொள்வோர் என்னை விடுத்து, கபிலரையே அதுபற்றி வினவ. லாம் எனக் காட்டி மேலே செல்கின்றேன். இக் காமத்தைப் பெரிது என்ருல் பின் எப்படித்தான் அறிவது?’ என்ற வின எழுதல் இயல்பன்றே! திருவள்ளுவளுர் இக்காதலைச் சில உவமை வழி நமக்குக் காட்ட நினைக் கின்ருர். அவற்றுள் ஒன்றிரண்டு காண்டோம். நல்ல மெல்லிய, முல்லைமலர் செடியில் மொட்டாகிப் பின் மலர்கின்றது. அம் மலர் மணம்வீசுகின்றது; பார்வைக்கும் அழகாக அமைந்துள் ளது. அம்மலரை நாம் பெற விழைகின்ருேம்-விரும்புகின் ருேம்-பார்க்கின்ருேம்-பறிக்கவும் செய்கின்ருேம். ஆனல் மலரின்நிலை என்ன? அதன் மென்மைத் தன்மை எத்தகையது! அதைப் பறித்து முகர்ந்து கசக்கினல் சீக்கிரம் வாடிவதங்கி விடும். பறிக்காது அப்படியே செடியில் விட்டாலும் ஒருபோது வாடித்தான் போகும். எனவே அதைப் பறிப்பதா? அன்றி விட்டுவிடுவதா? அப்படியே முகர்வதா? நமக்கே உரிமை யாக்கிக் கொள்வதா? அனைவரும் அதைப் பொதுவாகக் காணவிடுவதா? யாரே இதற்குப் பதில் கூறமுடியும்? வள்ளு. வராலும் இதற்குப் பதில் கூறமுடியவில்லை. என்ருலும் அம் மலரின் செவ்வியை - சிறப்பை அழகை - அமைதியான தோற்றத்தைச் சிலரால்தான் அனுபவிக்க முடியும் என்கிரு.ர். மலரின் நிலேயே அதுவாயின் காமம் அதனினும் மெல்லிய தாயின் அதன் நிலை என்ன? எண்ணத்தான் வேண்டும். அதன் செவ்விகாணும் சிலர் யாரோ? எங்கே தேடுவது? ஒருவேளை வள்ளுவர் கண்டிருப்பார். அச்சிலருள் ஒருவராக அவர் இருந்திருப்பார். எனவேதான் அவர் வாய், மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள், 1278)