பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் எனப்படுகின்றது. இதே கருத்தைக் கொண்டுதான் போலும் பேரின்ப வாரிதியில் திளைத்த தாயுமான அடி களார் மலரைக் கண்டபோது பார்க்கின்ற மலரும் நீயே இருத்தி எனப்பாடிப் பரவசமுற்ருர் என எண்ண வேண்டி யுள்ளது. வள்ளுவர் மற்ருெரு வகையாகவும் காமத்தை நமக்குக் காட்டவிரும்புகின்ருர். அதற்கு அவர் மற்ருெரு பொருளைக் கையாள விரும்புகின்ருர். அப்பொருள் எல்லாராலும் விருப் பப்படாததுதான். எனினும் அதன்வழிச் செல்வார் அதன் தன்மை உணர்வதையும், அதை உணராது தம்மை மறந்து அவர் ஆடுவதை மற்றவர் காண்பதையும் நாடறியுமல்லவா! அதை வைத்து வள்ளுவர் காமத்தைக் காட்ட விரும்பு கின்ருர். உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (குறள், 1201) என்றும், உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்துக் குண்டு (குறள், 1281) என்றும் கள்ளொடு சார்த்திக்காட்டி, அக்கள்ளினும் பல வகையில் மேம்பட்டது என விளக்கி உரைக்கின்ருர். கள்ளினை உண்டால் மட்டும் மகிழ்வூட்டும். காதலோ நினைப்பினும் காணினும் பெருமகிழ் வூட்டும் என்கின்ருர். எனவே கள் ளொடு காதலைக் காட்டினலும், வள்ளுவருக்கு 'கள்' உடன் பாடன்று. உவமைக்கு மட்டும் இதைக் கொள்ள வேண்டும். 'கள்ளுண்ணுமை என்றே ஒர் அதிகரத்தில் பத்துப் பாடலைப் பாடியுள்ளார் அவர். பெரிதாகிய காமத்தை இவ்வாறு ஒரோவழி உவமத்தாலும் பிறவகையாலும் காட்ட முடியுமேயன்றி அஃது இன்ன