பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 4}. அவர்தம் களவொழுக்கத்தைப் பின் பாங்கன், பாங்கி என்ற இருவருமே அறிவர். இவ்வொழுக்கத்தையே அகம் எனவும் அதன் கால அளவு இரண்டே திங்கள் எனவும் அறுதியிடுவர். "திங்கள் இரண்டின் அகமென மொழிப’ என்பது தொல்காப் பியம். எனவே அந்த இரண்டு திங்கள் எல்லையில் தலைவன் தலைவியைப் பலமுறை தானுகவும் பாங்கன் பாங்கியர் துணை வழியும் எதிர்ப்பட்டுக் கூடும் நிலையினைக் காண்கின்ருேம், இதுவே காமத்தின் முதற்படி இம்முதற்படி இப்படிக் களவி ல்ை ஆகவேண்டுமா? களவு நன்ருகுமா? என்ற வினுக்களுக்குப் பண்டைக் காலத்திலே அறிஞர் பலர் விடைகூறியுள்ளார்கள். இறையனர் களவியலுரை இக்களவு ஏற்புடைத்து என்பதற் குப் பெருவிளக்கங் கூறியுள்ளது. அறிஞரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டதே இஃது என்பது உண்மை. சில செயல்கள் கொடியன அல்லது தவறுடையனவாகத் தோன்றி னும் அவை நன்ருகுமாறு உண்டு. கல்லால் அடித்த சாக்கி யருக்கு இறைவன் வீடளித்த நிலையும் இதன் பாற்பட்டதே யாகும். எனவே இவ்வகப் பொருள் களவு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இனி இக் களவுக் காலத்தில் தலைவன் தலைவியோடு கூடிக் களித்தான என்ற கேள்வி இன்று சிலரிடம் எழு கின்றது. தொல்காப்பியத்தும் அதன் உரைகளிலும் பின் வந்த இலக்கண நூல்களிலும் களவில் மெய்யுறுப்புணர்ச்சி உண்டு என்றே குறிக்கப்பெற்றுள்ளது. கலந்த பொழுது காட்சியு மன்ன (அகத்திணை இயல், 16) என்ற சூத்திரத்தால் தொல்காப்பியர் தலைவன் தலைவியர் களவுக் காலத்தில் கலந்தார் என்றே குறிப்பிடுகின்ருர். இதற்கு உரை எழுதவந்த நச்சினர்க்கினியரும், கலத்தலும் காட்சியும் உடனிகழு மென்றுணர்க. கலத்தலின்றிக் காட்சி நிகழ்ந்ததேல் உள்ளப் புணர்ச்சியேயாய் மெய்யுறு புணர்ச்சி இன்றி வரைந்து கொள்ளுமென்க’ என விளக்கம் தருகின்ருச். எனவே களவில் மெய்யுறுபுணர்ச்சி இருந்தும் இல்லாமலும் , வெ-3