பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் மண நிகழ்ச்சி நடைபெற்றது என்பர். மேல் களவியலுள் (11ஆம் சூத்திரத்தில்) கூடுதலுறுத்தல், சொல்லிய நுகர்ச்சி’ என்று தொல்காப்பியர் கூறுதலாலும் மெய்யுறுபுணர்ச்சி அமைத்தல் ஒருதலை என்று தெளியப்பெறும். பின்வந்த நம்பி அகப்பொருள் ஆசிரியர் வெளிப்படையாகவே, உள்ளப்பு ணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் கள்ளப்பு ணர்ச்சியுட் காதலர்க் குரிய (34) என்று விளக்கிச் சென்றுள்ளார். திருவள்ளுவரும் புணர்ச்சி யின் மகிழ்தல் என்ற அதிகாரத்தின்வழி இருவரிடையும் களவில் மெய்யுறு புணர்ச்சி உண்டு எனக் கொள்ள வகை செய்கின்ருர். தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணுன் உலகு (குறள், 1103) என்று காட்டி அத்தலைவியின் தோள்மேல் துயிலும் பெரு நிலையைக் காட்டுகின்ருர். இதே உணர்வைப் பின் கற்பு நிலையில் தலைவியின்மேல் ஏற்றி, துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து (குறள், 12.18) என்கின்ருர். இந்தக் கருத்தை விளக்கமாகப் பின்வந்த ஆண்டாள், நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய் எனக் காட்டுகின்ருர். இந்த நிலையையே சங்ககாலப் புலவரும் வள்ளுவரும் நாகரிகமாகத் தோள்மேல் துஞ்சியதாகக் காட் டினர். எனவே மெய்யுறு புணர்ச்சி களவில் இருந்தது எனக் கோடல் பொருந்தும்.