பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 43 எனினும் அக்களவுப் புணர்ச்சிவழித் தல்ைவிக்கு மாசு உண்டாகுமே என அஞ்சியே அதைத் தடுக்க நினைப்பவர் கருதுவர். அவர் கருத்துச் சாலச் சிறந்ததே. எனினும் அவர் மெய்யுறு புணர்ச்சி உலகத் தாருக்கு நன்கு வெளிப்படுமுன் மணவினை நடந்தே ஆகவேண்டும் என்ற திட்டவட்டமான விதியினை அமைத்துத்தான் தொல்காப்பியர், திங்கள் இரண் டின் அகமென மொழிட என வரையறுத்துள்ளார் என்பதை அறியாததே அக்கருத்துக்குக் காரணமாகின்றது. ஆகவே அவ்விரண்டு திங்களுக்குள் எப்படியும் மணம் நிகழ்ந்தே ஆக வேண்டும். மேலும் கற்பிற் புணரும் புணர்ச்சியைத் தொல் காப்பியர், கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொளக்குரி மரபிளுேர் கொடுப்பக் கொள்வதுவே - (கற்பியல், 1) என்றும், கொடுப்போர் இன்றியும் காணமும் உண்டே (கற். 2) என்றும் கற்பிற் புணர்ச்சி கரணத்தொடு கூடியதே எனக் காட்டி, களவிற் புணர்ச்சிக்குக் கரணம் இல்லை என்பதையும் விளக்கினர். களவில் இருவரும் உள்ளம் ஒன்றி ஒருவராகி விட்டபின் கரணம் எதற்கு என்ற வின எழலாம். அதற்கும் தொல்காப்பியர் காரணம் காட்டியுள்ளார். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (கற். 4) என்பது தொல்காப்பியர் காட்டும் காரணமாகும். நாட்டில் களவியலில் பொய்மை கலவாதபோது கரணம் தேவை யில்லை. ஆயினும் மக்கள் வாழ்வில் பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் வெளிப்படையாக யாவரும் கண்டுகொள்