பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் ளும் கரணங்கள் அமைந்தன என்பது அவர் கருத்து. எனவே களவு நிலையில் உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் இருந்தன என்பதும் அதன் கால எல்லை இரண்டே திங்கள்’ என்பதும் உணரல் வேண்டுவதாகும். மெய்யுறு புணர்ச்சி யைத் தடுக்க நினைப்பவரும் மனைவியைக் கன்னியாகவே மண மேடை ஏற்ற விரும்பும் நல்ல குறிக்கோளே உடையவராத லின் அவர் கருத்திற்கும் நாம் பிழை கற்பிக்கக் கூடாது. எனினும் தமிழ் நாட்டு முறைப்படி நினைத்தலும் செய்தலோ டொக்கும் என்ற பரிமேலழகரின் உள்ளத்தால் உள்ளல்’ என்ற தொடரின் உரைப்படி, எண்ணமும் செயலும் இரண் டும் ஒன்றே என உரையில் மெய்யுறு புணர்ச்சியால் காணும் குற்றம் உள்ளப் புணர்ச்சிக்கும் பொருந்தும் என உணர்ந்து உள்ளத்தால் நினைத்தபோது அவள் கன்னித் தன்மை அகன்றது எனவே இருவகைப் புணர்ச்சியும் ஏற்புடைத்து எனக் கொள்ளல் பொருந்தும். எப்படியாயினும் அத்தலைவன் இரண்டு திங்களின் எல்லைக்குள் தலைவியை மணந்தே ஆதல் வேண்டும். ஊரறியக் கரணங் காட்டிக் கடிமணம் செய்தே ஆதல் வேண்டும். இதுவே தமிழ்முறை காட்டிய காமத்துப் பகுதி. இதன் விரிவெல்லாம் ஈண்டுரைப்பின் பெருகும். இனி இந்தக் களவு கற்பெனும் இருநிலையிலும் தலைவன். தலைவியர் தன்மைகளுள் ஒரு சிலவற்றைக் காணல்வேண்டும். வள்ளுவர் குறள்வழிக் காணும்போது களவு நிலையில் தலைவன் உள்ள உணர்ச்சியையும் கற்புநிலையில் தலைவியின் உள்ள நெகிழ்வையும் நன்கு காண முடிகின்றது. இரண்டிடத் தும் இருவரும் உள்ள நெகிழ்வும் உணர்வும் பெறுகின் முர்களாயினும் களவு நிலையில் அதைத் தலைவன் அதிகமாக வாய்விட்டு விளக்கலைக் காண முடிகின்றது. அப்படியே கற்பில் தலைவனைப் பிரியும் நேரமெல்லாம் அதன் கொடுமை யைத் தலைவியே பெரும்பாலும் வாய்விட்டுக் கூறும் வகை யினைக் காண முடிகின்றது. பெரும்பாலும் என்றமையின் சிறுநிலை களவில் தலைவியும் கற்பில் தலைவனும் பேசுவதையும் உணர முடியும்.