பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 45 களவில் ஏன் தலைவி வாய் திறந்து தன் வருத்தத்தைக் காட்ட முடியவில்லை என்பதற்குத் தொல்காப்பியர் தக்க காரணம் காட்டுவர். களவியலில் தலைவி தன் உணர்வனைத் தையும் குறிப்பால் உணர்த்துவாளேயன்றி வாய் திறந்து விளக்குவதோ அல்லது தலைவனைத் தேடிக்கொண்டு செல் வதோ கிடையாது என்கின்ருர். ஆனல் அந்த நிலையறிந்து தலைவன் ஒடோடி வருவான் என்பதையே வள்ளுவர் அவர் கூறுவதாக அமைந்த பல குறள்வழி விளக்கிக் காட்டுகிரு.ர். காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் காணு மடனும் பெண்மைய வாதலின் குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னை (கிளவி, 17) என்று காட்டுவர் தொல்காப்பியர். நச்சினர்க்கினியர் இதை நன்கு விளக்கினர். எனவே குறள் வழியும் பிற இலக்கி யங்கள் வழியும் தலைவி கூற்று அதிகமாக நிகழவில்லை போலும். தலைவன் தலைவியினும் உயர்ந்தோன் என்ற நிலையிலும் இக்காமத்துப் பாலில் தலைவி உயர்நிலைக்கும் இடனும் உண்டு. உளத்தால் ஒன்றி இருவருக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்க விரும்பவில்லையாயினும், புலவர்கள் பண்புவழி உயர்வு தாழ்வு காட்டவேண்டிய நிலையில் காட்டித் தீரத்தானே வேண்டும். 'மிக்கோயிைனும் கடிவரை இன்றே எனத் தலைவன் உயர்வு காட்டிய நெறியிலே தலைவன் ஏற்றம் அறிகின்ற நாம் மனைவியின் உயர்வையும் காணவேண்டாமா? ஆம்! மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் கினையுங் காலைப் புலவியுள் உரிய (பொருளி. 33) என்று தொல்காப்பியர் புலவியாகிய ஊடலுள் மனைவி உயரத் தலைவன் தாள்பணியும் தகைமையைச் சொல்லு கிரு.ர். ஆனல் வள்ளுவர் அப்பணிவும் முடிவில் தலைவனுக்கு வெற்றியையே தேடித் தரும் என்ற விந்தையை,