பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் ஊடலுள் தோற்றவர் வென்ருர் அதுமன்னும் கூடலுள் காணப் பெறும் (குறள், 1228) என்று காட்டுவர். தலைவிக்கு என்றும் தலைவனை வழிபடு நிலையும் கடப்பாடும் உண்டென்றும் சிறுதுணியன்றிப் பெரு துனி வரக்கூடாது, வந்தால் தலைவர் பணிதல் தவறில்லை என்றும் காட்ட விழைந்த தொல்காப்பியர் இரண்டையும் இணைத்து, காமக் கடப்பினுள் u೯ಾಗಿ ಕಿಸ கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான (கற். 19) எனக் காட்டுவர். இவற்றின் விளக்கமெல்லாம் மனைவாழ் மக்கள் தம் அனுபவத்தில் கண்டு தெளிய வேண்டுமேயன்றிக் காட்சி வகையால் கொண்டு காட்ட இயலாது எனக் கூறி மேலே செல்கின்றேன். இனி, வள்ளுவர் பெரிதாகிய இக் காமத்தை எப்படி நுணுகி ஆராய்கின்ருர் எனக் கண்டு அமைவோம். காமம் கண்ட உடனேயே மகிழ்ச்சியைத் தருவது எனக் கண்டோம்.இதைத் திருவள்ளுவனர் காமத்துப்பாலின் முதல் அதிகாரத்திலேயே விளக்கிக் காட்டி,கடைசியாக நாம் மேலே காட்டிய கள்ளோடு பொருந்திய குறளைக் கூறிமுடிக்கின்ருர், குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் இருவரும் வாய்ச் சொல்லானன்றிக் குறிப்பாலேயே தம் உள்ளத்து உணர்வைப் புலப்படுத்திக் கொள்ளும் நிலையைக் காட்டியுள்ளார். இரு வரும் மாறிப்புக்கு இதயம் எய்தும் நிலையை இக்குறிப்புக்களே நன்கு உணர்த்துகின்றன. யாளுேக்கும் காலை கிலன் நோக்கும் நோக்காக்கால் தான்ளுேக்கி மெல்ல நகும் (குறள், 1094) என்றும்,