பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 47 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் (குறள், 1095) என்றும் அக்குறிப்பினைக் காட்டுவர். குறிப்பிற் குறிப்புணரும் திறன் வாய்ந்த அவரிடை மற்றவருக்கு என்ன வேலை? அடுத்துவரும் புணர்ச்சியின் மகிழ்தலில்தான் வள்ளுவர் 'காமமோ பெரிதே' என்பதைக் காட்ட நினைக்கிருர். அவர் அதில் வெற்றி பெற்ருர் என்று கூறமுடியாது. யாருமே சொல்லால் காட்டி வெற்றி பெறமுடியாது என்பது ஒருதலை. தலைவியின் முயக்கத்தால் பெற்ற புதுப்புது நலன்களைத் தலை வன் எண்ணி எண்ணி மெள்ள மெள்ள வெளியிடுகின்ருன். கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள (குறள், 1101) என்றும், வேட்டபொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினுள் தோள் (குறள், 1105) என்றும், உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் (குறள், 11.06) என்றும் தலைவன் பாராட்டுக்கள் சொல்லுகின்றன. இந்த அதிகாரத்தில் வள்ளுவர் இப்பெருங்காமப் பயனையும் வற்புறுத்துவர். காலம் மறந்து எல்லை மறந்து நாம் முதலில் கண்ட எங் கெழிலென் ஞாயிறு எமக்கு’ என உலகை மறந்து தம் கூடல் இன்பத்தில் உள்ள தலைவன் தலைவியருக்குக் கடமை யும் உண்டல்லவா? ஆனல் அவர்கள் மறப்பார்களாயின் எப்படித் தலைவர்களாக முடியும்? எனவே அவர்தம் காதல் இன்பத்துக்கு இடையில் கடமை இன்பத்தையும் உணர்த்து கின்றர். இவ்வாறு உணர்த்த வல்லவரை உடன் கொள்ளாத