பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 50. என்பதும் வள்ளுவர் வாக்கு: இத்தனை உள்ள உணர்வு இருந்தும் பெண்தன்மை மேலானது என்பதை வள்ளுவர், கடலன்ன காமம் உழந்தும் மடலேருப் பெண்ணிற் பெருந்தக்க தில் (குறள், 1137) என்று காட்டுகின்ருர். 'பெண்ணிற் பெருந்தக்கயாளவு கற். பென்னும் திண்மையுண்டாகப்பெறின் என்ற இல்லற இயலில் காணும் குறளை இங்கே இணைத்துக் காணுங்கள். பெண்மை பெருமதிப்புடையது. அது கற்பின்வழிச் சிறப்பது. அவ்வாறு சிறத்தல்தான் பெண்மை வாழ வழி. கற்பில் மட்டுமன்றிக் களவிலும் அப்பெண்மை போற்றப் பெறுகின்றது; காப் பாற்றப்பெறுகின்றது. நாம் மேலே கண்டபடி எத்துணை உணர்வுமிகினும் குறிப்பிலைன்றித் தலைவி தன் பெருங் காமத்தை-கடலன்ன காமத்தைக் காட்டமாட்டாள். பின் கற்பியலில் அவள் வாக்கிலே பல குறள் காட்டும் வள்ளுவர் இங்கே அஞ்சுகின்ருர். தலைவியின் அச்சம் அவரச்சமாகின்றது. தலைவன் மடலேறுதலைக் கூறலாம்; தலைவி நினைக்கலாமா? அந்த நினைக்காத பெருநிலையைப் பெருந்தக்க தாகப் போற்று கின்ருர் வள்ளுவர். நாண்துறக்கும் நிலையினில் காமம் கடலெனப்பெருகிய காலத்தும் அக்கடலுள் மூழ்கி ஆழ நேருமோ என்ற நிலையிலும் பெண்மை காப்பாற்றப்படு கின்றது. இதன் நுண்மையை உணர்ந்தோரே காமமோ பெரிதே' என்ற உண்மையை உணர்ந்தவராவார். தலைவனும் தலைவியும் நெருப்பிற்குச் சமமாகின்ருர்கள். நெருப்பு நெருங்கில்ை சுடும்; விலகினல் தண்ணென்றிருக்கும். இது மற்றவருக்கு. அத்தலைவனையோ தலைவியையோ அவரன்றி-அவருள் ஒருவருக்கொருவரன்றி மற்றவர் சுடின் வெம்மைத் தீயால் வேகவேண்டியது தான். ஆனால் அவர் களுக்குள் அத் தீ எப்படி உள்ளது? அதிலேயும் வள்ளுவர் காமத்தின் நுண்மையைப் புகுத்தியுள்ளார். பிற பெண்களைக் காணின், தொடின் வெம்மை விளைவதுஇருக்க, காதலர் ஒரு