பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் வரை ஒருவர் தொட்டு விலகின் வெம்மை விளையும்; கூடி யிருப்பின் அத்தித் தணிந்துவிடும். இதுதான் கற்பு நிலை. இந் நிலையை வள்ளுவனர் இருவர் மேலும் ஏற்றிக் கூறுகின் ருர். தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ (குறள், 1159) என்று தலைவி கூற்றிலும், நீங்கிற் றெறு உங் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்ருள் இவள் (குறள், 1104) என்று தலைவனின் கூற்றிலும் வைத்து வள்ளுவர் காட்டு கின்ருர். இதன் வழி வள்ளுவர் தலைவி தலைவன் இருவருமே மற்றவர் அணுக அஞ்சத்தக்க நெருப்பினைப் போல்வார் எ ன் ற உண்மையை விளக்கிவிட்டார். கற்புநிலையினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுமை யாக்கிவிட்டார். பின் புலவிமுதலிய அதிகாரங்களாகவே 'யாரினும் காதலர்’ முதலிய குறள்களிலே வேற்று வரைவு தலைவனுக்கு உண்டு என்னுமாறு வள்ளுவர் காட்டினும், அவர் உள்ளம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற அளவில்தான் அமைகின்றது. அதனுலே மற்றப் புலவர்களைப் போன்று பரத்தையிற் பிரிவையே வள்ளுவர் தொடவில்லை. வரைவின் மகளிர் என்று நாட்டிலிருந்த ஒருவழக்கத்தை-பொருந்தா நெறியினை எங்கோ ஒழிபியலில் காட்டிச் சென்ருர். இங்கும் புலவியில் ஒருத்தியைக் காட்டி நீ சூடினிர் யாருள்ளித்தும்மினிர்’ “யாருள்ளி நோக்கினிர் என்பன போன்ற தொடர்கள் ஐயத் தின் பாற்பட்டு எழுந்தனவாக அமைகின்றனவே யன்றித் தலைவன் ஒழுக்கங் கெட்டவகை யாண்டும் வள்ளுவர் காட்ட வில்லை. எனவே வள்ளுவர் காட்டிய காமவாழ்வு நீயுநானு: மாய் ஏகபோகமாய் அமைந்த தெய்வ வாழ்விலும் ஏற்ற மு ைட த் து. அதனலன்ருே இதனினும் இனிதுகொல் தாமரைக் கண்ணுன் உலகு என அவரே கேட்கின்ருர்?