பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புறம் காட்டும் அறம் மனிதன் பிற உயிர்களினும் வேறுபட்டவன் என்பது நாடறிந்த உண்மை. அவ்வேறுபாட்டை விளக்குவது அவ னது பகுத்தறிவும் வாய்மொழியுமேயாம். வாய் திறந்து பேசித் தான் கொண்ட கருத்தில் பிறருக்குப் புரிய வைக்கவே மொழி பயன்படுகின்றது. இம்மொழியே மனிதனைப் பிற உயிரினங்களினின்றும் பிரித்து மனிதனுக வாழ வைக்கின்றது. பகுத்தறியும் உணர்வு மனிதனே அன்றி வேறு சில பறவை விலங்கினங்களிடத்தும் இருப்பதை இன்றைய விஞ்ஞானிகள் ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அடிப்படையிலேதான் நம் நாட்டுப் பழம்பெரும் புலவர்கள் பிற உயிரினங்களைக் காட்டி மனிதனுக்குப் பல உண்மைகளையும் வாழ்வின் அடிப்படை களையும் அறிவுறுத்தினர் போலும். எனவே அவையும் ஒரு வேளை வாய் திறந்து பேசின் அவை மனிதனினும் மேலாக விளங்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஆகவே மனி தனை மனிதனுக வாழ வைப்பது பேச்சும் அதன் வழியே தோன்றிய மொழியும் அதன்வழி உருவான இலக்கியங்களு மாம். மனிதன் தன் கருத்தை மற்றவருடன் பரிமாறிக் கொள் ளும்போது பேசுகிருன். அப்பேச்சுச் சாதாரணமாக-தனி நிலையில் உள்ளதாக அமையுமாயின் அது காற்ருெடு காற்ருகக் கலந்து மறைகின்றது. ஆனல் அதுவே மனித சமுதாயத்தை வாழ வைக்கும்-என்றென்றும் ஏற்ற