பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் 59 முறச் செய்யும் நிலையில் வெளிப்படுமாயின் அது இலக்கிய மாக அமைகின்றது. உலக மொழிகளிலுள்ள எல்லா இலக் கியங்களும் இந்த அடிப்படையில் தோன்றியனவே என்பதை முன்பு கண்டோம். புறநானூறும் இவ்வாருய உலகச் சமு. தாயத்தை வாழவைக்கும் பண்பாட்டு நெறியில் முகிழ்த்த ஒரு தமிழ் இலக்கியம்-தொகை நூல். இப்புறப் பாடல் கள் எழுந்த அதே நாட்களில் எத்தனை எத்தனையோ பாடல் கள் எழுந்திருக்கும். அவையெல்லாம் மாய இந்த நானுாறு மட்டும் நிலைபெற்று வாழ்கின்றனவென்ருல், இவை மக்கட் சமுதாய வாழ்வை என்றென்றும் வாழவைக்கும் அடிப்படை யில் அமைந்த பாடல்கள் என்பது சொல்லாமலே அமையும். ஏறக்குறைய இன்றைக்கு இரண்டாயிர மாண்டுகளுக்குமுன் தோன்றிய இந்த நானூறு பாடல்களும் காலத்தை வென்று வாழ்கின்றன என்ருல், அதற்குக் காரணம் அவை உலகுக்கு உணர்த்தும் நல்ல நீதிகளேயாம். இப்பாடல்கள் பெரும் பாலும் அக்காலத்தில் வாழ்ந்த மன்னரையும் மற்றவரையும் முன்னிறுத்தி, அவரவர்தம் இயல்புகளையும், பண்புகளையும், வீரம் விளக்கும் ஆற்றலையும், பிறவற்றையும் விளக்கும் பாடல்களேயாயினும், அவற்றின் இடையில் பாடிய புலவர் கள் தம்மை மறந்து, உலக நலம் ஒன்றையே உணர்ந்து, உலகம் என்றென்றும் வாழத்தக்க வகையில் நல்ல அறநெறி முதன்மை பெற்ற பல சமுதாய உண்மைகளை உரைத்து விட் டார்கள். இங்கே நாம் சேர சோழ பாண்டியரையும் சிற் றரசர்களையும் மட்டும் காணவில்லை. இப்பாடல்கள்வழி அக்கால மக்கட் சமுதாயத்தை மட்டும் காணவில்லை. இவற் ருல் உலகம் உள்ளளவும் மக்கள் வாழவேண்டிய தெய்வநெறி களையும் செம்மைப் பண்புகளையும் பிற வாழ்வியல் நெறி களையும் காண்கின்ருேம். எனவேதான் இப் புறநானூற்றுப் பாடல்கள் காலத்தை வென்று வாழ்கின்றன-வாழும் என்பது உறுதி. புறநானூறு என்று கூறியவுடனே பலர் இது போரைப் பற்றியதாகும். எனவே இதில் என்ன புதுமை இருக்கப்