பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் போகின்றது?’ என்று கேட்பர். அதுமட்டுமன்றித் தமிழர் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக்கொண்ட பெருமை யைத்தானே இது காட்டுகின்றது என்றும் சாடுவர். தமிழ்ச் சமுதாயம் போர் விரும்பாச் சமுதாயமாக எப்படி அமைந் திருந்தது என்ற உண்மையை, முன் தொல்காப்பியர் கண்ட வாழ்வியலில் விளக்கமாகக் கண்டோம். அதே தொல் காப்பிய அடிப்படையில் அமைந்த இப்புறப்பாடல்களும் மக்களே அமைதி வாழ்வில் செலுத்த வழிகாட்டியாக நின்றன என்பதும், அவ்வாறு அமைதி காணமுடியாத நிலையிலேயே போர் பற்றிய விளக்கங்கள் தந்துள்ளன என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கன. மக்கள் வாழ்வுக்கு வேண்டிய பொதுவான அறநெறி பற்றியும் தனித்த சமுதாய வாழ்வு பற்றியும் பிற பண்பாடுகள் பற்றியும் புறம் பாடுகின்ற காரணம் ஒன்றே அதைச் சிரஞ்சீவியாக்கி விட்டது என்பது உறுதி. மனித வாழ்விற்கு இம்மையில் தேவையான அறம், பொருள், இன்பம் பற்றியும் மறுமையில் அடையக்கூடிய வீடு பற்றியும் புறம் நன்கு விளக்குகின்றது. இன்பம் இன்ன வகைத்தென விளக்க முடியாதது எனப்பொருள் கூறினும் அந்த இன்பத்தை அறத்தாறு பெறும் வழி இது எனப் புறம் சுட்டிக் காட்டுகிறது. அப்படி வீடு சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆயினும் அடைய வழி இது எனப் புறம் சுட்டத் தவறவில்லை. மற்றைய பொருள் நலம் பற்றிய விளக்கம் தந்து, அனைத்தும் அறத்தின் வழியே அமைவன என்பதைப் புறம் பலவிடங்களில் விளக்கிக் காட்டுகின்றது. எனவே உயிர் வாழ்விற்குத் தேவையான அனைத்தும் அறத் தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்ற உண்மை ஈண்டு வலியுறுத்தப் பெறுகின்றது. உண்மையும் அது தானே! இவ்வறநெறியைப் பகுத்து உணர்கின்றவன் மனிதன். அவன் அறத்தாறு வாழ்கின்ருன் என்ருல், அதற்கு அடிப் படையாக அமையும் சில நியதிகள் உள. அவற்றை அவன்