பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் எல்லாமும் துன்பமற்று வாழ்ந்தால் அதனினும் சிறந்த வாழ்வு வேருென்று இருக்கத் தேவையில்லை. இந்த அடிப் படையை நாடித்தான் உலக அரசியல் தலைவர்கள் குடி யரசு, பொதுவுடமை என்ற பல தத்துவங்களைப் பற்றி விளக்கித் தம் தம் நாட்டு ஆட்சியை அமைத்துக் கொள்ளு கின்றனர். கொள்கை அளவில் எவ்வளவுதான் இவை பேசப் படினும் இவற்றை அறமுணர்ந்த மக்கள் தம் வாழ்வில் மன தார மேற்கொள்ளாக் காரணத்தில்ைதான் இன்னும் உலகில் கொடுமைகளும் உணவுப்பஞ்சங்களும் போர்களும் பிற தீமை களும் தோன்றுகின்றன. இவற்றை நன்கு ஆய்ந்த தமிழ் நாட்டு மன்னன் ஒருவன் இக்கொடுமைகளுக்குரிய கார ணத்தை ஆராய்ந்தான். உண்மை உணர்ந்தான்-உலகுக்கும் உணர்த்தினன். அவன் உணர்த்திய உண்மையை உணராத காரணத்தில்தான் நம் நாட்டில் நிதிமந்திரிகள் தம் பதவியை விட்டுவிட வேண்டிய நிலையும் பிறநாடுகளில் நாட்டு முதல் வர்கள் கொலை செய்யப் பெற வேண்டிய நிலையும் உண்டா கின்றன. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்ன கிைய அப்புலவன் இவ்வுலகம் இருப்பதற்குக் காட்டும் ஒரே காரணம், தமக்கென வாழாப் பிறர்க் குரியாளர் இருப்பதே யாம். தனிமனிதனும் பொது நலங்காக்கும் பொறுப்பேற்ற மனிதனும் இந்த அடிப்படை உண்மையை உணர்வாராளுல் பின் உலகம் செம்மையில் வாழாதுபோகுமா? இதோ அவர் வாக்கையே காண்போம் உண்டால் அம்ம இவ்வுலகம்-இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்ருள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே (புறம். 182)