பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறம் காட்டும் அறம் . 65 என்ற பெருவழுதிப் பாட்டை ஒவ்வொருவரும் உதட்டால் அன்றி உள்த்தால் சொல்லித் தமக்கு அத்தகுதி உண்டா என எண்ணிப் பார்க்க வேண்டும். பார்த்து உண்டாயின் ஆட்சிப் பொறுப்பையோ அறப்பொறுப்பையோ வேறு எந்தத் தனிப் "பொறுப்பையோ ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்: இன்றேல் அமைதியாக விலகி ஒதுங்கி வாழவேண்டும். இது தான் நியதி. இது அன்வருக்கும் பொதுவான நியதி. இந்த அடிப்படையிலே ஆளும் மன்னனுக்கு அறமுரைத்த புறப் பாடல்களும் பல. அவற்றுள் ஒருசிலவற்றைப் பின்பு காண் போம். ‘உலகம் பொல்லாதது என்று வேதாந்தம் பேசுவோர் பலர். எனினும் நல்ல அறநெறி பற்றிய உள்ளம் அதற்கு இடங்கொடுப் பதில்லை. 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்று காட்டிய வள்ளுவனர் இன்பத்துள் துன்பம் காணும் மக்களை விளித்து, துன்பத்துள் இன்பம் காண்பதே மக்கட் பண்பு என்கிருர், இடுங்கண் வருங்கால் நகுக’ என்கின்ருர், எனவே எதையும் இன்பமாக்கும் உள்ளம் நம்மிடமேஉள்ளது. இதல்ைதான் சமணர்களால் பலதொல்லைக்கு உள்ளான அப்பரடிகளார் அவற்றையெல்லாம் இன்பமாக்கி, தம் வாழ் வையே இன்பமாகக் கண்டு 'இன்பமே எந்நாளும் துன்ப மில்லை என்று வாயாரப் பாடினர். இதையே சங்ககாலப் புலவர் பக்குடுக்கை நன்கணியர் என்பவர், இன்ன தம்ம இவ்வுலகம் இனிய காண்க.இதன் இயல்புணர்ந் தோரே (புறம், 194) எனப்பாடினர் இப்பாட்டில் புலவர் உலக இயல்பினைக் காட்டி, அவ்வியல்புக்குகிடையில் இனிமை காண்பதே அறம் எனக் காட்டி மகிழ்கிருர், - இவ்வாறு இனிமை காண்பதற்கு வேறு சில புலவர்கள் வழியும் காட்டுகின்றனர். நாம் வாழும் வ்கையில் நம்மைச் சுற்றி உள்ளவர்களைச் செம்மை உடையவர்களாக இருக்கப்